பக்கம்:தமிழ் விருந்து.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைச்சுவை 7. "பெருமா ளடியானுக்குப் பெண்டிருந்துமே-எங்கள் பெருமாளை நீ பழித்துப் பேசலாமோடி’ என்றாள். ஒருவாறு அன்று சண்டை ஒய்ந்தது. இனி, ஒரு குறவனுக்கும் ஒரு குறத்திக்கும் இடையே நடந்த பேச்சைப் பார்ப்போம் : குற்றால மலையிலே வேட்டையாடப் போனான் சிங்கன் என்ற குறவன். அவனுக்கு மனைவியாக வாய்த்த சிங்கி என்ற குறத்தி குறி சொல்லப் புறப்பட்டுச் சென்றாள். வேட்டையாடி வளமான பறவைகளைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான் சிங்கன்; சிங்கியைக் காணவில்லை; மயங்கினான், தயங்கினான். "மேடை மயிலுக்குக் கண்ணியை வைத்துநான் மாடப் புறாவுக்குப் போனேன் மாடப் புறாவும் மயிலும் பிடித்தேன் வேடிக்கைச் சிங்கியைக் காணேன்" என்று அங்கும் இங்கும் பார்த்தான் மனந் துடித்தான்; பல்லைக் கடித்தான் வரட்டும் சொல்கிறேன்' என்று வழி பார்த்திருந்தான். குறி சொல்லப்போன சிங்கி பட்டு உடுத்திப் பணிபூண்டு சிங்காரமாக வந்து சேர்ந்தாள். அவள் கோலத்தைக் கண்டான் சிங்கன், கோபமெல்லாம் எங்கேயோ பறந்து போய்விட்டது. "இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல் எங்கே நடந்தாய் நீ சிங்கி ?” என்று மெத்தக் கனிவாக அவன் வினவினான். "கொத்தார் குழலார்க்கு வித்தார மாகக் குறிசொல்லப் போனேனடா சிங்கா" என்றாள் சிங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/73&oldid=878565" இலிருந்து மீள்விக்கப்பட்டது