பக்கம்:தமிழ் விருந்து.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தமிழ் விருந்து எடுத்தான் உங்கள் சாமி பின்னும் பசி தீர வழியின்றி நஞ்சைத் தின்றான். சாமியைப் பார் சாமியை " "நாட்டுக்குள் இரந்தும் பசிக்காற்ற மாட்டாமல் - வாரி தஞ்சை யெல்லாம் உண்டான் உங்கள்நாதன் அல்லோடி" என்று பழித்தாள் மூத்தாள். இளையாள் அவளுக்கு இளைத்தவளா? பெருமாள் குட்டை உடைத்து விட்டாள். "மாட்டுப்பிற கேதிரிந்தும் சோற்றுக்கில்லாமல் - வெறும் மண்ணையுண்டான் உங்கள் முகில்வண்ண னல்லோடி" "உங்கள் சாமி சேதி தெரியாதோ? மாட்டை ஒட்டி ஒட்டி மேய்த்தான்; பின்னும் சோற்றுக்கில்லை; மண்ணை வாரித் தின்றான்" என்றாள் இளைய பள்ளி. இப்படி உண்டிக்குத் திண்டாடிய சாமிகளுக்கு ஒரு வண்டியாவது உண்டா? அதேது. "ஏறஒரு வாகனம் தானும் இல்லாமல் - மாட்டில் ஏறித் திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி” என்று இடித்துரைத்தாள் மூத்த பள்ளி. அப்படியா செய்தி அந்த மாடுகூடக் கிடையாமல் பருந்தின் மேலேறிப் பறக்கிறானே உங்கள் பெருமாள்' என்றாள் இளைய பள்ளி. "வீறு சொன்னதென்ன மாடுதானும் இல்லாமல் - பட்சி மீதில் ஏறிக்கொண்டான் உங்கள் கீதனல்லோடி" என்று பழித்தாள். இவ் விரு பள்ளியருக்கும் வாய்த்த கணவன் அழகக் குடும்பன். அவன் பெருமாள் அடியான். அதைப் பிடித்துக் கொண்டாள் மூத்த பள்ளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/72&oldid=878563" இலிருந்து மீள்விக்கப்பட்டது