பக்கம்:தமிழ் விருந்து.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நகைச்சுவை இவ் வுலகம் ஒரு நாடகசாலை: இந்நாடக சாலையில் அரசராய் வருவார் சிலர் வீரராய் விளங்குவார் சிலர்; காதலராய்த் தோன்றுவார் சிலர்; விகடராய் வருவார் சிலர். கூத்துக் கேற்ற கோமாளியைக் கண்டால் எல்லோருக்கும் ஆனந்தம் ! அவர் பேச்சைக் கேட்டால் பிள்ளைகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்; பெரியோர்கள் அக்கம் பக்கம் பார்த்து அடக்கமாகச் சிரிப்பார்கள்; மாதர்கள் மறைவாகச் சிரிப்பார்கள். இப்படி எல்லோரும் ஏன் சிரிக்கிறார்கள்? விகடர் சொல்லும் சொல்லில் அமைந்த சுவை, எல்லோரையும் சிரிக்கச் செய்கின்றது. இச் சுவையைத்தான் நகைச்சுவை என்பர். நகைச்சுவை ஏச்சிலும் தோன்றும், பேச்சிலும் தோன்றும். கற்றவர் கவியிலும் பிறக்கும்; மற்றவர் உரையிலும் பிறக்கும். முதலில் ஏச்சிலே பிறக்கும் சுவையைச் சிறிது பார்ப்போம் : முக்கூடல் என்ற ஊரிலே ஒரு பள்ளன். அவனுக்குத் தாரம் இரண்டு; முத்தாள் முக்கூடற் பள்ளி: இளையவள் மருதூர்ப்பள்ளி. மூத்தாள் பெருமானைச் சேவிப்பவள் இளையாள் சிவனடியாள். இவ் விருவரிடையே ஏச்சும் பேச்சும் இல்லாத நாள் இல்லை. ஏசுவதற்கு வேறொன்றும் தோன்றாவிட்டால், இவர்கள் கும்பிடும் சாமிகளைக் கூசாமல் ஏசுவார்கள். சிவனும் பெருமாளும் இப் பள்ளிகள் வாயில் அகப்பட்டுப் படும்பாட்டைப் பார்ப்போம் : "பிச்சைக்காரச் சாமியைக் கும்பிடும் மருதூராளுக்குப் பேச்சென்ன பேச்சு" என்று தொடங்கினாள் மூத்தாள். "பிச்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/71&oldid=878561" இலிருந்து மீள்விக்கப்பட்டது