பக்கம்:தமிழ் விருந்து.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தமிழ் விருந்து மற்றொரு வகையிலும் கலிங்கம் தமிழ் நாட்டில் வழங்குகின்றது. தமிழிலக்கியத்தில் கலிங்கம்' என்ற சொல் ஆடையைக் குறிப்பதாகும். ஆடைக்கும் கலிங்கம் என்று பெயர் எப்படி வந்தது? கலிங்க நாட்டின் பெயரே ஆடையின் பெயராயிற்றோ என்பது ஆராய்தற்குரியதாகும். ஊர்ப் பெயர் ஆடையின் பெயராக அமைதலுண்டு. காலிக்கட்டு (Calicut) என்ற ஊரில் நெய்யப்பட்ட துணி ஆங்கிலத்தில் 'காலிக்கோ' என்று வழங்குதல் போலவும், இரணியல் என்ற ஊரில் நெய்யப்படுகின்ற ஆடை இரணியல் என்று மலையாள தேசத்தில் பெயர் பெற்றிருத்தல் போலவும், கலிங்கத்தில் நெய்யப்பட்ட ஆடையைக் கலிங்கம் எனத் தமிழ் நாட்டார் வழங்கியிருத்தல் கூடும். இனி, தமிழ்ப் பெருங் கவிஞராகிய கம்பரை ஆந்திர தேசத்து மன்னன் ஆதரித்த கதையொன்று தமிழ் நாட்டில் வழங்குகின்றது. எக் காரணத்தாலோ கம்பருக்கும் சோழ மன்னனுக்கும் மனவேற்றுமை உண்டாயிற்று. அந்நிலையில் மன்னனை நோக்கி, "மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந் தோதமிழை ஒதினேன்-என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு" என்று கடுமையாகப் பேசிவிட்டுக் கம்பர் சோழ நாட்டை விட்டகன்று ஆந்திர தேசத்திலுள்ள ஒரங்கல் நாட்டை அடைந்தார். அப்போது பிரதாபருத்திரன் என்பவன் அங்கு அரசு வீற்றிருந்தான். அவ் வேந்தனைத் தமிழ்ப் புலமையால் வசப்படுத்தினார் கம்பர். புவிச் செல்வனாகிய பிரதாபனும் கவிச் செல்வராகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/82&oldid=878582" இலிருந்து மீள்விக்கப்பட்டது