பக்கம்:தமிழ் விருந்து.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும் 81 கம்பரும் சிறந்த நண்பராயினர். கம்பர் விரும்பியவாறு பிரதாபன் மாறுகோலம் புனைந்து, அடைப்பை தாங்கிப் பின்னே வர, கம்பர் தம்மை அவமதித்த சோழ மன்னன் சபையினுள்ளே தலைநிமிர்ந்து சென்றார் என்று கர்ண பரம்பரைக் கதை கூறும். வடக்கேயுள்ள நாட்டை 'வடுகு' என்றழைத்த தமிழ் நாட்டார் மேற்கேயமைந்த நாட்டைக் 'குடகு என்னும் பெயராற் குறித்தார்கள். குடக்கு என்பது தமிழில் மேற்கு என்று பொருள்படும். எனவே, குடகு என்பது மேற்கேயுள்ள நாடு. நன்னூல் என்னுந் தமிழிலக்கணம் குடகைத் தமிழ் நாட்டின் மேற்கு எல்லையாகக் கூறுகின்றது. "குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்" ன்பது நன்னூல். ஆங்கிலத்தில் குடகு என்பது கூர்க்' (Coorg) என்று சிதைந்து வழங்குகின்றது. தமிழ் நாட்டின் மேல் திசையில் அமைந்த மற்றொரு நாடு மலையாள தேசமாகும். மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையே நெடிய தொடர் மலை நின்று எல்லை குறிக்கின்றது. ஆனால், முற்காலத்தில் மலையாள தேசம் சேரநாடு என்னும் பெயரோடு தமிழ்நாட்டின் ஓர் அங்கமாக விளங்கிற்று. பண்டைத் தமிழ் நாட்டை ஆண்ட முடிவேந்தர் மூவர் என்று தமிழ் இலக்கியங்கள் கூறும். மூவேந்தர் என்பார் சேர சோழ பாண்டியர் ஆவர். சேரநாட்டு மன்ன்ர் குடியிலே பிறந்த அறிஞர் பலர் தமிழிலே சிறந்த நூல்கள் செய்துள்ளார்கள். பஞ்ச காவியங்களில் ஒன்றாகப் பாராட்டப்படுகின்ற சிலப்பதிகாரம் சேரநாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/83&oldid=878584" இலிருந்து மீள்விக்கப்பட்டது