பக்கம்:தமிழ் விருந்து.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - தமிழ் விருந்து வழங்குவர் அகமுடையானை ஆம்படையான் எனவும், அகமுடையாளை ஆம்படையாள் எனவும் கூறுவர். இத் தகைய அகம் என்பது தெலுங்கிலும் இல்லை; கன்னடத்திலும் இல்லை. இனி வானத்திலுள்ள மேகத்தைச் சிறிது பார்ப்போம் : முகில் என்பது மேகத்திற்கு ஒரு பெயர். மேக நிறம் பொருந்திய இராமனை, "மையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ ஐயோஇவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்" என்று பரிந்து பாடினார் கம்பர். முகில் என்பது தெலுங்கில் மொகிலு என்றும், கன்னடத்தில் முகில் என்றும், துளுவத்தில் முகல் என்றும் காணப்படுகிறது. வானத்திலே தவழும் வெண்மேகத்திற்கு மஞ்சு என்று பெயர். தெலுங்கிலும் கன்னடத்திலும் மலையாளத்தி லும் மஞ்சு உண்டு. இன்னும், நீர்கொண்ட கருமேகத்தைக் கார் என்றும், கொண்டல் என்றும் &.றுவர் தமிழர். திருமாலைக் கார்வண்ணன் என்றும், கொண்டல் வண்ணன் என்றும் ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். கார் உலாவும் காலத்தையும், அக் காலத்தில் விளையும் பயிரையும் கார் என்றே கூறுவர். தெலுங்கில் கார் என்பது மழைக் காலத்தைக் குறிக்குமே யன்றிக் கருமேகத்தைக் குறிப்பதில்லை. கன்னடத்திலும் அவ்வாறே. புயல் என்பது மழை மேகத்தைக் குறிக்கும் மற்றொரு சொல். பொதிய மலையிற் படிந்து மழை பொழியும் புயலின் பெருமையை ஒரு குறவஞ்சி பாடுகிறாள் : "திங்கள்முடி சூடுமலை, தென்றல்விளை யாடுமலை தங்குபுயல் சூழுமலை, தமிழ்முனிவன் வாழுமலை"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/90&oldid=878600" இலிருந்து மீள்விக்கப்பட்டது