பக்கம்:தமிழ் விருந்து.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியும் பிற மொழியும் தெலுங்கு 89 என்பது குறத்தி பாட்டு கொண்டலும் புயலும் மற்றைய திராவிட மொழிகளில் இல்லை. இனி, மழையைக் குறிக்கும் சொற்களைப் பார்ப்போம் : மாரி என்பது மழைக்குரிய பெயர்களில் ஒன்று. "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்னாற்றுங் கொல்லோ உலகு" என்று மாரியின் பெருமையைப் பாராட்டினார் திருவள்ளுவர். மாரியும் மழையும் தெலுங்கில் இல்லை. வான் என்பது தெலுங்கில் மழையைக் குறிக்கும். தமிழிலும் வான் என்பதற்கு மழை என்ற பொருள் உண்டு. மழையின் சிறப்பை வான் சிறப்பு என்றார் வள்ளுவர். இடைவிடாது பெய்யும் அடைமழையைச் சோனை என்பர் தமிழர். சோனை தெலுங்கிலும் உண்டு. சிறு மழைக்குத் தமிழில் துவானம் என்பது பெயர். 'மழை விட்டும் துவானம் விடவில்லை என்ற பேச்சைத் தமிழ் நாட்டிலே கேட்கலாம். துவானம் என்பது துவர என்றும், துர என்றும் தெலுங்கில் வழங்கப்படுகின்றது. மழையாலும் ஆற்று வெள்ளத்தாலும் நிறைகின்ற நீர் நிலைகளின் பெயரைச் சிறிது கருதுவோம் : ஏர்த்தொழிலாகிய பயிர்த்தொழிலே முன்னாளில் ஏற்றமான தொழிலாகக் கருதப்பட்டது. ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை ஏரி என்று பெயர் பெற்றது. குளிப்பதற்காக அமைந்தது குளம், வானத்தி னின்றும் பெய்யும் மழையால் பெருகும் குளத்தை வான மாரிக்குளம் என்பர். ஒவ்வோர் ஊரிலும் கோவிலுக் கருகே அமைந்திருக்கும் குளம் தெப்பக்குளம் எனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/91&oldid=878602" இலிருந்து மீள்விக்கப்பட்டது