பக்கம்:தமிழ் விருந்து.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியும் பிற மொழியும் - தெலுங்கு 93 காலத்தைக் குறிக்கும் சொற்களில் தமிழுக்கும் தெலுங்கிற்கும் உள்ள ஒற்றுமையைப் பார்ப்போம் : கதிரவன் உதிக்கும் காலம் முதல், மறையும் காலம் வரையுள்ள பொழுதைத் தமிழிலே பகல் என்பர்; தெலுங்கிலே பகலு என்பார்கள். நடுப்பகலைப் பட்டப் பகல் என்பர் தமிழர் பட்டப் பகலு என்பர் தெலுங்கர். நேற்று என்பதற்கு இலக்கியத் தமிழ் நெருநல். 'நேற்றிருந்தவனை இன்று காணோம்; இதுதான் இவ்வுலகின் பெருமை" என்ற கருத்தை அமைத்து, 'நெருதல் உளன்.ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்தில் வுலகு" என்றார் திருவள்ளுவர். இக் குறளில் நெருநல் என்னும் சொல் நேற்று என்ற பொருளைத் தருகின்றது. நெருநல் என்பது தென்னல் என்றும் வழங்கும். "அன்னம் துணையோ டாடக் கண்டு நென்னல் நோக்கி நின்றார் ஒருவர் நென்னல் நோக்கி நின்றார் அவர்நம் பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர்” என்ற சிலப்பதிகார இசைப்பாட்டில் நென்னல் என்னும் சொல் ஆளப்பட்டிருக்கின்றது. தெலுங்கில் நென்னல் என்பது நின்ன என்று வழங்குகின்றது. ரேப்பு என்ற சொல் தெலுங்கில் நாளை என்ற பொருளைத் தரும். இறப்பு என்னும் தமிழ்ச் சொல்லே தெலுங்கில் ரேப்பு என்றாயிற்று. இறப்பு என்பது கடந்த நிலையைக் குறிக்கும். கடந்த சென்ற காலத்தைத் தமிழில் இறப்பு என்றார்கள் கடந்து வருங்காலத்தைத் தெலுங்கிலே ரேப்பு என்று கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/95&oldid=878610" இலிருந்து மீள்விக்கப்பட்டது