பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தமிழ் வையை

இலக்கணமும், மேற்கோளாகச் சில அகத்தியச் சூத்திரங்களும் உள்ளன. பிற்காலத்து யாப்பிலக்கண நூல்களில் பரிபாடலுக்குரிய இலக்கணம் இல்லை.

பரிபாடல் என்பது வெண்பா முதலிய நால்வகைப் பாக்களின் அடிகளும் விரவி வரும் ஒருவகை இசைப்பாடல். 'கலியும் பரிபாடலும் போலும் இசைப் பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன (தொல்காப்பியம், செய்யுளியல், 242) என்று பேராசிரியர் எழுதுவர். தனக்கென்று வரையறையாக அடியிலக்கணம் இன்றி எல்லாப் பாடல்களின் அடிகளும் வந்து நெகிழ்வுடன் வருவதால் பரிபாடல் என்ற பெயர் உண்டாயிற்று. பரிதல் - தளர்தல்; நெகிழ்தல். 'பரிபாடல் என்பது பரிந்து வருவது; அது கலியுறுப்புப் போலாது நான்கு பாவானும் வந்து பல அடியும் வருமாறு நிற்குமென்று உணர்க’ (தொல்காப்பியம், செய்யுளியல், 118, உரை) என்பது நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம். இது பெரும்பாலும் காம இன்பம் குறித்து வரும்; சிறுபான்மை 'இன்னது வேண்டும் என்ற பிரார்த்தனையை உடையதாகி வரும்."

எட்டுத் தொகை நூல்களில் கலித்தொகை, பரிபாடல் என்ற இரண்டு நூல்களும் பாட்டால் பெயர் பெற்றவை. கலிப்பாக்களால் ஆனமையால் கலித்தொகை என்றும், பரிபாடலால் அமைந்தமையால் பரிபாடல் என்றும் அவ்விரண்டு நூல்களுக்கும் முறையே பெயர்கள் வந்தன, பரிபாடலில் எழுபது பாடல்கள் இருந்தன என்று உரையாசிரியர்கள் எழுதியிருக்கிருர்கள்.

திருமாற்கு இருகான்கு, செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட்கு ஒன்று --மருவினிய

'காமம் கண்ணிய நிலைமைத் தாகும் (தொல். செய்யுள் இயல், 121); என்பது காமப் பொருள் குறித்து வருமென்றவாறு. கண்ணிய என்றதஞனே முப்பொருளுமன்றிக் கடவுள் வாழ்த்தினும் மலவிளையாட்டினும் புனல்விளையாட்டினும் பிறவுமெல்லாம் காமம் கண்ணியே வரும் என்பது (பேராசிரியர். )

ர் இறையனாகப் பொருள். 1. உரை: தொல். செய். 149, பேர்.