உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

101 அவர்கள் சார்பாக வாதாடவும் வகையற்றுக் கிடக்கிறார்கள். அதேபோது, வெளிநாடுகளிலே வியாபாரக் கோமான் களாகி வடவர் கொழுக்கிறார்கள்-வெளிநாடு சென்றுள்ள வர்களின் சீர்சிதையாதிருக்கப்பாதுகாப்புத் தேடப்படுகிறது, ஆறடுக்குப் பவனம் கட்டப்படுகிறது. அங்கே பவனம்! இங்கே? தம்பி, அழகேசர்களின் கவனமெல்லாம், தங்களுக்கு அடுத்த முறை என்ன பதவி கிடைக்கும் என்று ஆருடம் பார்ப்பதிலும் நேருவின் தயவைப் பெற்றால் எங்காவது ஒரு ராஜபவனத்தில் கொலுவிருக்கும் பாக்யம் கிடைக்குமே என்று ஏங்கிக் கிடப்பதிலும்தான் செல்லும். அவர்கள், ஏன் வடநாடு, தென்னாடு என்று பேசுவது பேதமை என்று கூறு கிறார்கள் என்ற சூட்சமம் மக்களுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது; எனவே, அவர்கனின் பேச்சுப் பற்றிக் கவலைப் படாமல், நீ, வடநாட்டவர்கள் பவனங்களில் வாழ்வதைக் எடுத்துக் காட்டி, இது நியாயமா? ஏன் இதனை அனுமதிக்க வேண்டும்? எத்தனை காலத்துக்கு இதைச் சகித்துக் கொள்ள முடியும்? நமக்கென்று ஓர் நாடு இல்லையா? அது ஏன் அன்னி யரின் வேட்டைக்காடாகி இருக்கிறது? என்று கேட்டுக் கேட்டு அவர்களின் முகம் கேள்விக் குறியாக மாறும்படி செய். தம்பி! பிறகு பார், இந்த அழகேசர்களின் நிலையை? ஆப்ப சைத்த மந்தி கதை தெரியுமல்லவா-சிறுவனாக இருக்கும் போது சொல்வார்களே - அந்த நிலைதான்! அங்கே பவனம், தம்பி, இங்கே படகுப் பயணம். அங்கே ஆறு அடுக்கு மாளிகை, இங்கே சேரி. இதை எடுத்துக் காட்டு, தம்பி; நித்த நித்தம் எடுத்துக் காட்டு; தொடுக்கப்படும் தூற்றல் கணைகளைத் துச்சமென்று எண்ணி தூய உள்ளத்துடன் தாயக விடுதலைக்கான தன்னிக ரற்ற தொண்டாற்றிக் கொண்டிரு. பிறகு பார், நாட்டிலே புதியதோர் பொலிவு பூத்திடுவதை; உன் பணியினால், நம் நாடு பொன்னாடு ஆகத்தான் போகிறது. ஒப்பற்ற பணி இலே தம்பி, நாம் ஈடுபட்டிருக்கிறோம்; உன் அருந்திறனை நம்பித் தான், மார்தட்டி நின்று மாற்றாரிடம் சொல்லி வருகிறேன், திராவிட நாடு திராவிடருக்கே என்று. 17-7-1955 அன்புள்ள, Jimmynd