உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

100 ஏழை எளியவர் வீட்டுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகிறார்கள். தொலை தூரத்தில் அழைத்துச் சென்று அந்தச் சிறுவர்களை பிச்சையெடுக்கச் சொல்லிப்பயிற்சியளிக்கிறார்கள். பஜனை பாட, பல்லைக் காட்டிக் கெஞ்ச, நமஸ்த்தே சொல்ல, கண்ணீர் சிந்த - இத்தகைய பாடம் சொல்லிக் கொடுத்து, சிறார்களை பிச்சை எடுக்கச் செய்கிறார்கள். அந்தச் சிறுவர்கள், இம்சை தாளாமல், பிச்சைக்காரர்களாக, குழல் ஊதிக் கொண்டும், மேளம் கொட்டிக் கொண்டும், உண்டி குலுக்கிக் கொண்டும், உள்ளம் உருகச் செய்யும் பாடல்கள் பாடிக் கொண்டும், தெருத்தெருவாகப் பிச்சை எடுத்து, அந்தக் கய வர்களிடம் பணத்தைக் கொடுக்கிறார்களாம் - சோறு, கந்தல் இவை கிடைக்குமாம் சிறுவர்களுக்கு. ஓடிவிட முயன்றால், உதை, குத்து. பிச்சைக்காசு குறைந்தால் தலையில் குட்டு, கன்னத்தில் அறை, இப்படிக் கொடுமைகள்! 1400 - சிறுவர்கள்; 147-சிறுமிகள் காப்பாற்றப்படும் ஒரு ஆஸ்ரமத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் - நீங்கள் தரு கிற பணம் அந்த ஆசிரமத்துக்குத்தான் என்று புளுகிப் பிச்சை எடுக்கும்படி, சிறுவர்களை, அக் கயவர்கள் மிரட்டி வேலை வாங்கி வருகிறார்கள். போலீசுக்கு, இந்த அக்ரமம் தெரிந்து,இப்போது கயவர் சிலர் பிடிட்டதாகச் செய்தி வந்தி ருக்கிறது. டில்லி சர்க்காரில் மந்திரி வேலை பெற்றுக் கொண்டு, இங்கே அடிக்கடி பவனிவந்து வடநாடு தென்னாடு என்று பேசுவது கூடாது, அகில பாரதம், ஏக இந்தியா, என்ற தத்து வத்தைத் தாரகமாகக் கொள்ள வேண்டும் என்று இங்கு பிர சங்கம்' செய்பவர்களின் மீது நினைவு சென்றது எனக்கு, இந்தச் செய்தியைப் படித்தபோது. ஏய்த்துப் பிழைப்பவர்கள் ஏமாளிச் சிறுவர்களைப் பிச் சைக் காரர்களாக்கி, பணம் பறிக்கிறார்கள். பதவிக்குப் பல்லிளிப்போரை, பசப்பிடத் தெரிந்த வட நாட்டுத் தலைவர்கள், மந்திரி வேஷம் போடச் செய்து, தொண்டரடிப்பொடி ஆழ்வார்களாக்கி, திராவிடத்திலே 'பஜனை' செய்யச் சொல்கிறார்கள். இங்கே வரி வசூலித்துத் தருகிறார்கள் - பஜனையும் நடத்து கிறார்கள் - பாதி தேங்காய் மூடியும் ஒரு பிடி சுண்டலும் கொஞ்சம் வெண் பொங்கலும் கிடைக்கிறது- உண்டு, உருசி உருசி! என்று கூவி ஆனந்தத்தாண்டவம் ஆடுகிறார்கள் இந்த அடிவருடிகள். இவர்களின் இனத்தவர், திராவிடர், வெளி நாடு சென்றாவது வாழ்வு நடத்துவோம் என்று கடல் கடந்து சென்றும், வறுமையையே கண்டு வேதனைப்படுகிறார்கள்.