உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

கடிதம்:15 இந்திராணி சேலை! சர்க்கார் திட்டங்களில் ஊழல் - பார்லிமெண்ட், பத்திரிகை கருத்துகள். தம்பி, புராண மதிபடைத்த ஓர் மன்னன் - மந்தகாச வாழ்வால் மதியை மங்கவைத்துக் கொண்ட மந்திரிமார்கள் - அந்தச் சபைக்கு வந்தான் ஒரு சாகசக்காரன்!"அரசே!" என்றான், "என்ன?" என்று தர்பார் முறையில் கேட்டான் மன்னன்! "அரசரே! நான் எத்தனையோ இராஜாதிராஜக்களைப் பார்த்தேன், அவர்களோடு பழகினேன் - ஆனால் ஒருவருக்கா வது, தங்களுக்கு உள்ளது போன்ற வீரதீரம், பராக்கிரமம் இல்லை, எனவே தங்களைக் கண்டதும், அது தங்களுக்கே உரியது என்று தீர்மானித்து விட்டேன்,என் காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன், காவலா என்றான். காவலன், "காணிக்கையை ஏற்றுக் கொள்ளும்படி ஒருவன் கேட்பது கண்டு மகிழ்ந்து, அங்ஙனமே ஆகுக! காணிக்கைப் பொருள் யாது?" என்று கேட்டான். "ஈரேழுபதினாலு உலகத்திலும் இதற்கு ஈடு கிடையாது வேந்தே. " அப்படியா! மெத்தப் புகழ்கிறாயே! என்ன அது! நவ ரத்தின மாலையோ - முத்துப் பல்லக்கோ - தந்தக்கட்டிலோ, தங்கப் பாளமோ ...55 "மன்னா! இதெல்லாம் சாமான்ய மன்னர்களுக்கு! தங் களுக்கு நான் தரப்போவது.?p3 "என்ன! என்ன அது?" "இந்திராணி தேவியாரின் எழில் மிக்க சேலை-தங்கள் பட்ட மகிஷி பூரிப்படைய!. 35 "இந்திராணி தேவியார்!" ஆமாம் அரசர்க்கரசே! தேவேந்திரனுடைய பார்யாள், சாட்சாத் இந்திராணிதேவி, தவமிருந்து பெற்ற சேலை. அதை அணிந்து கொண்டால், அரசே! வெள்ளை யானை கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும். கற்பக விருட்சம், காமதேனு, குற்றேவல் புரியும் -- அப்படிப்பட்ட மகிமை வாய்ந்தது 104 405 "