உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

135 "அப்படியா..... நம்ப முடிய வில்லையே....." "இப்போது நம்ப வேண்டாம் மகாராஜா! சேலையை நான் இந்தச் சபையிலே, பிரித்துக் காட்டப் போகிறேனே, அப்போது நம்புங்கள் -- இப்போது ஏன்! ஏழை பேச்சு அம் பலம் ஏறுமா!! "தேவேந்திரனுடைய தேவியின் சேலை......" "தங்கள் திருச்சபையில் கொண்டு வந்து காட்டப் போகிறேன்......3 யார்? நீ?" "உரு கண்டு எள்ளற்க, மன்னா!உண்மையைப் பொறுத் திருந்து பாரும். "எப்போது கொண்டு வருவாய்?33 "ஆறேழு மண்டலம் பூஜை- அது அற்புதமான சேலை...... முடிந்ததும் அந்த சாகசக்காரனுக்கு, இந்த உரையாடலுக்குப் பிறகு, அரண்மனையில் சகல வசதிகளும் செய்து தரப்பட்டன பூஜை நடத்தி வந்தான்! மலர்களை விடப் பழங்கள் அதிகம் செல வாயின, பூஜைக்கு!! தேனும் பாலும் குடம் குடமாக! தேவ பூஜைக்குத் துணை செய்ய தத்தைகள்!! பொன், கேட்கும் போதெல்லாம். இப்படிப் போக போக்கியமாக சாகசக் காரன் இருந்து வநதான் - ஆறு மண்டலம் முடிந்தது. ஏழும் வந்து சென்றது-மன்னன் இன்னும் ஏன் தாமதம் என்றான்; "மன்னா! பூஜை முடியவில்லையே, ஆறேழு மண்டலமாகும் என்றேனே மறந்தீரா?" என்றான் சாகசக்காரன், "நான் எப்படி மறப்பேன், நேற்றொடு ஏழு மண்டலம், இருநூற்று எண்பது நாட்கள் முடிந்தனவே என்றான் மன்னன்;பெருஞ் சிரிப்பொலி கிளம்பிற்று, "மன்னா! ஆறேழு மண்டலம் என் றேன் - தாங்கள் அதன் தாத்பரியத்தைத் தெரிந்து கொள்ள வில்லை. ஆறேழு - நாற்பத்திரண்டு - நாற்பத்திரண்டு மண் டலங்கள் - நாற்பத்திரண்டு நாற்பது நாட்கள் - என்று விளக்கமுரைத்தான்-மன்னன் திடுக்கிட்டுப்போனான் - எனி னும் என்ன செய்வது- இந்திராணியின் சேலை-- அதன் மகிமையால், வெள்ளை யானை, காமதேனு, கற்பக விருட்சம்!! சரி!- என்றான் - சாகசக்காரன இராஜபோகத்தில் மூழ்கினான். நாட்கள் நகர்ந்தன-கடைசியில் அவன் சொன்ன நாள் வந் தது, "நாளை தர்பாரில்!" என்று சாகசக்காரன் தவயோகி பாணியில் சொன்னான். மன்றம் கூடிற்று-மன்னன் ஆவல் நிரம்பிய கண் களுடன்!!