உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

136 சாகசக்காரன், உள்ளே நுழைந்தான் -ஓம்! என்றான் மும்முறை! மேலே பார்த்தான், கரத்தை உயர்த்தினான், ஆஹா! என்றான், கண்களில் ஒத்திக்கொண்டான், எழுச்சி மயமான நிலை பெற்றவன் போலாகி, என்னை நம்ப மறந்தீர் களே காவலனே! இதோ பாரும்/வானவில் இதனிடம் என்ன செய்யும் -? ஆஹா! பார்த்துக் கொண்டே யுகக் கணக்கில் இருந்துவிடலாம் போலிருக்கிறதே! என்ன பளபளப்பு! எத் தகைய ஜொலிப்பு தொட்டால் வெண்ணெய் மீது கைபடு வது போலிருக்கிறதே" என்று பேசலானான்-மன்னன் திகைத்தான் - மந்திரிகள் மருண்டனர்- ஏனெனில், சாக்சக் காரன் வெறுங்கையுடன் தான் தெரிகிறான்! "இந்திராணியின் சேலை... எங்கே...." என்று மன்னன் இழுத்தாற்போலக் கேட்டான். "இதோ மன்னவா! என்னுடைய சித்து முறைக்கு மெச்சிச் சிவனார் அருளிய வரத்தின் விளைவு - வண்ணச் சேலை - இதோ --இதோ " என்று கூறியபடி பிரித்துக் காட்டுவதுபோலப் பாவனை செய்தான்! சேலையைப் "எனக்குத் தெரியவில்லையே..." என்று ஏக்கத்துடன் கூறினான் மன்னன். திகைத்தவன் போலானான் சாகசக்காரன்--பயந்தகுர லில் - "மன்னா! தங்களுக்குத் தெரியவில்லை என்றா கூறுகிறீர் கள்......" என்றான். ஆமாம் தெரியக் காணோமே..." என் றான் மன்னன் ஐயகோ! ஒரு விஷயத்தைக் கூற மறந் தேன், அறிவிலி நான்! அரசே! யாருடைய அன்னை பத்தினி யோ, அப்படிப்பட்டவர்களின் கண்களுக்குத்தான் இது தெரி யும் உத்தமியாயிற்றே உமது அன்னை - உமக்குத் தெரிந்த தாக வேண்டுமே என்றான்-மன்னனுடைய மாதாவின் மீது ம சு உண்டு-மன்னனுக்கும் அது தெரியும் - எனவே, குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று குமுறி,"ஆஹா! அற் புதம! அற்புதம்! இதெல்லவா தேவப்பிரசாதம்/> என்று கூறியபடி, சாகசக்காரன் கையிலிருந்து சேலையை வாங்கினான் (பாவனைதான்!) மந்திரிகளிடம் காட்டினான். அவர்களோ, மன்னனுக்கு ஒத்து ஊதினர்!சாகசக்காரன் வெற்றிபெற்றான். 0 0 0 திட்டங்கள் தீட்டும் காங்கிரசாட்சியினர். இது போலவே 'இந்திராணி சேலை' காட்டுகிறார்கள் தம்பி. தெரியவில்லையே என்றால், உனக்குத் தேசபக்தி இல்லை அதனால்தான் தெரியவில்லை என்கிறார்கள். நமக்கேன் இந்த வீண்பழி என்று பயந்து, பலபேர், தங்களைத் தேசபக்தர்கள் என்று காட்டிக் கொள்வதற்காகவே, "தெரிகிறது! தெரிகிறது' என்று குதூ