உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

கலம் காட்டிப் கிறது. 157 பேசுகிறார்கள். பரிதாபமாகத்தான் இருக் ஆகஸ்ட்டு தீ பற்றிய சிந்தனையில், நீயும் இருந்தாய், நானும் இருந்தேன் - ஆகையால், உனக்கு, முன்பே இதைக் கூறமுடியாமல் போய்விட்டது. காங்கிரஸ் தீட்டும் திட்டங்கள், எவ்வளவு அவலட்சணி மாக இருக்கிறது என்பதைப் பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் காட்டிற்று. சர்க்காருடைய 'மேற்பார்வை' பெற்று, நிதி உதவி பெற்று; தொழில்களின் பராமரிப்புக்கும் வளர்ச்சிக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. யான தொழில்துறை நிதிக் கார்ப்பரேஷன். திட்டம் அருமையானது, வரவேற்கத்தக்கது. வளர்ச்சி பெறக்கூடிய ஒரு தொழில், அதற்குத் தேவை முதல் - பணம் - கிடைக்காததால், குன்றிப்போகக் கூடாது, சர்க்கார் அதற்கு நிதி அளித்து, அதனைக் காப்பாற்ற வேண்டும் என்பது திட்டத்தின் நோக்கம். தம்பி, தாய்ப்பால் குடிக்கிறது குழந்தை! எதுவரையில்? வேறு உணவுகளை உண்டு ஜீரணித்துக் கொள்ளும் பக்குவம்” பெறுகிற வரையில். தொழில் துறைக்குச் சர்க்கார் அளிக்கும் உதவியும், அதைப் பெறும் தொழிலமைப்பு, வளரும் பக்குவத்தைப் பெறுவதற்காகத்தான். இந்த நல்ல திட்டம் எவ்வளவு இலட்சணமாக நடை பெற்றிருக்கிறது, தெரியுமா? டில்லி சட்டசபையில், சரமாரி யாகக் கண்டனக் கணைகள்! காங்கிரசின் எதிரிகள் தொடுத் தது அல்ல, காங்கிரஸ் உறுப்பினர்களே கணைவிட்டுத் துளைத்தனர். ஊழல், திறமைக் குறைவு, நெளிகிறது! நாற்றமடிக்கும் அளவுக்கு நிர்வாகம் மோசமாக இருந் திருக்கிறது. ஒரு கண்ணாடித் தொழிற்சாலை-வடக்கே-சோடேபூர் என்ற ஊரில்! இது, திட்டத்தின்படி உதவி நிதி கேட்டது. சர்க்காருக்கு, இப்படிப்பட்ட திட்டங்களுக்காகப் பணம் இருக்கிறது - வெற்றி வியர்வைதான் அது? ஏழையின் குருதி எவ்வளவு அக்ரமமாகப் பாழாக்கப்பட் டிருக்கிறது என்பதைக் கேள் தம்பி, நாம் எப்படிப்பட்ட ஆட்சியிலே சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரியும். அ.க-9 4