உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

152 விசாலாட்சி நீலாயதாட்சி சிவகாமசுந்தரி குழல்வாய்மொழி குவளைக்கண்ணி கோமதி குமாரி என்று அம்மைக்கு அஞ்சலி செலுத்தியும், திரிபுரமெரித்தவிரி சடைக் கடவுளே! என்றும், பாகுகனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா! என்று முருகனைத் தோத்தரித் தும், 'அருக்கு மங்கையர் மலரடி வருடியும் கருத்தறிந்தபின் அரைதனில் உடைதனை அவிழ்த்தும் ஆங்குள அரசிலை தடவி யும் அழியாதே' என்று அறநெறி உரைத்துக் கொண்டும், திருக்கோலம் காட்டியும், அடியார் தரும் காணிக்கையைக் குவித்துக் கொண்டும், கோலோச்சமுடிகிறது. பண்டங்களின் விலை வீழ்ந்தாலும் ஏறினாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்தாலும் கூடினாலும், எது பற்றியும் கவலையின்றி இவை களைப்பற்றி எண்ணி ஏங்கிடச் 'சாமான்யர்கள்' உளர்,நாம் சதாசிவத்தின் பூலோகப் பிரதி பிம்பமாகக் காட்சி தருவோம் என்று கூறாமற் கூறிக் கொலு வீற்றிருக்க, அவரால் முடிகிறது. துறவி! எனவே அவருக்கு எதுவும் துரும்பு!வாழ்க்கை கரும்பு போல் இனிக்கும்போது ஏன் அவர் ஏழையர் உலகுக்கு வந் துற்றிடும் இடர்ப்பாடுகள் பற்றி ஏக்கம் கொள்ளப் போகிறார்? விடைஏறும் எம்மான், அவருக்கு அளித்துள்ள பதவி இருக் கும்போது, பஞ்சமும் பட்டினியும், பசியும் கொட்டுவதாலே பதறிப் பரதவிக்கும் பாமரரின் நிலையிலா அவர் இருக்கவேண் டும்! செச்சே! சிவனருள் சாமான்யமோ! செய்வருக்கும் சில பல மனக்குறை எழக்கூடும்!கோட்டையில் கொடிகட்டி ஆள் வோருக்கும் சிற்சில வேளைகளில் தொல்லையும் துயரமும் தாக் கிடும். இந்தத் துறவிக்கோ, எல்லாம் இன்பமயம்! எங்கும் இன்பமயம்! காலையிலே, மாலையிலே, காகம் கரையும் வேளையிலே மடத்திலே,வேறு இடத்திலே,எங்கும், சிவானுப வம், சுகானுபவம்! துறவிக்கன்றோ கிட்டும் இத்தகைய தேன் சொட்டும் வாழ்க்கை! தம்பி, துறவிக்குக் கிடைக்கும் இந்த 'இன்ப வாழ்வு பற்றிய எண்ணம். எனக்கு மேலிட்டதால், நான் முன்னாளில் துறவியின் நிலை இருந்த தன்மை பற்றியும், இந்நாளில் துறவி என்பது எத்தகைய பக்குவமான பதவியாக மாறிவிட்டது என்பது பற்றியும் எண்ணிடலானேன். அரண்மனையில் பிறந்த இளங்கோவும் துறவிதான்! இதோ இன்று அடுப்படி உழன்றோர்கூட துறவிகளாவதன் மூலம், அரண்மனை அந்