உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

151 ஆணிப் பொன்னாபரணம் இருத்தல்போல. வடவருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் திராவிடத்திலே எழில் இருக்கிறது அந்த எழிலோவியங்களில் ஒன்றுதான் குற்றாலம்! 28-8--1955 தம்பி, அ அன்புள்ள, துறவி -காவியில்லை! கடிதம்: 17 ஆரியத் தவசிகளும், துறவிகளும் - மேல்நாட்டு எலினார் அந்தனி கதை. இயற்கை தீட்டித் தந்துள்ள ‘எழிலோவியம்' குற்றாலம், கண்டேன், சளித்தேன் என்று கூறினேன் அல்லவா, நினை விருக்கிறதா, அருவியில், 'தருமபுரம்' கண்டேன் என்று குறிப்பிட்டிருந்ததை. அந்தத் துறவியைக் கண்டதும், என் எண்ணம், துறவறத்தின் மீது சென்றது. இதோ பாரேன், நாமெல்லாம்படுகிற தொல்லைகளை. திராவிடம் ஏன் தனி நாடாக இல்லை, இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்திலும் நமது பலம் பொருந்திய மந்திரிமார்கள், டில்லியால் இளித்த வாயராக்கப்பட்டு விட்டார்களே! என்ன வெட்கக் கேடு இது? சேலத்து இரும்பும் நெய்வேலி நிலக்கரியும் நமக்குப் பயன் படவில்லையே, எவ்வளவு அநீதி இது? என்றெல்லாம் கவலைப் படுகிறோம்; கோவாவில் படுகொலை, பீகாரில் சித்திரவதை, பஞ்சாபில் அடக்குமுறை, என்ற இவைகளைப் பற்றி எல்லாம் எண்ணுகிறோம்.நெஞ்சில் பாரம் அதிகமாகிறது, இதோ 'தருமபுரத்' துறவியானதால், இத்தகைய சுமைகளைத் தாங்கித் தத்தளிக்க வேண்டிய தொல்லைக்கு ஆளாகாமல், மந்திரமாவது நீறு! சுந்தரமாவது நீறு! என்று கீதமிசைத்துக் கொண்டு, (மெல்லிய குரலில்-மனதுக்குள்ளாகவே சில வேளை களில்) உமையொரு பாகனை எண்ணி பெருமிதம் கொண்டு, சிவானுக்கிரகத்தைப் பருகி, பொன்னார் மேனியராக விளங்கி, காமாட்சி மீனாட்சி