உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

238 மாவீரன் சிவாஜியின் வழி வழி வந்த வீரர்காள்! மராட் டியம் இன்று மமதை நிறைந்த வெள்ளையன் பிடியிலேசிக்கிச் சீரழிவதைப் பார்த்தும் உங்கள் இரத்தம் கொதிக்கவில்லையா! எங்கே சிவாஜி ஊட்டிய வீரம்! அந்த மாமன்னன் தந்த வீடு தலை உணர்ச்சி மங்கிக் கிடக்கிறது.மராட்டிய மாவீரர்காள்! மடிந்து போகவில்லை! மாற்றானை ஓட்டிட வாரீர்! மராட்டியத் தின் கீர்த்தியை மீண்டும் நிலை நாட்டிட வாரீர்!- என்று தான் அழைத்தனர்! விஜய நகர சமஸ்தான காலத்தைக் கவனப்படுத்தித் தான் ஆந்திரர்களை அழைத்தனர்! ரஞ்ஜித் சிங்கின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த னர், பாஞ்சாலத்தில்! ஷா ஆலம் சக்கரவர்த்திக்கு வெள்ளையர் இழைத்த கொடுமைகளை எடுத்துக் கூறித்தான், டில்லி வட்டாரத்தின ரை, இஸ்லாமியரை அழைத்தனர்! இங்ஙனம், மொழிவழி அமைத்திருந்த அரசுகளின் முன் னாள் சிறப்புகளை எடுத்துக் காட்டித்தான், போர்முகாம் அமைத்தனர்! இது போதாது என்று, காந்தியார், தெளிவுபட, திட்ட வட்டமாகத் தெரிவித்தார், சுயராஜ்யம் கிடைத்ததும், 'மொழி வழி அரசு' தான் அமைக்கப்படும் என்று. அன்று முதல் இன்று வரை, 'மொழி வழி அரசு' என்ற பிறப்புரிமைக் கிளர்ச்சி இருந்து வருகிறது. மக்களுடைய கிளர்ச்சிக்கு மதிப்பளிக்கும் மாண்பு இருந் திருக்குமானால், மொழி வழி அரசு' திட்டத்தை நடைமுறைக் குக்கொண்டுவர நேரு சர்க்கார் முனைந்திருக்குமே தவிர, மூக்கில் கொஞ்சம் நாக்கில் கொஞ்சம் அறுத்து எடுத்து ஒட்டு வேலை நடத்தச் சொல்லும் ராஜ்ய புனரமைப்புக் கமிஷனையா நியமித்திருக்கும்!! மொழி வழி அரசு என்ற கொள்கையை ஏற்றுக்கொண் டால்,எந்தெந்த இடத்தில் எந்த மொழியாளர் தொடர்ச்சி யானபிரதேசத்தில் வசிக்கின்றார்கள் என்பதைக்கண்டறிந்து அந்த வகையிலே எல்லைகளை நிர்ணயிக்கும் வேலை நடந்திருக் கும்: ராஜ்ய புனரமைப்பு என்ற 'கபட நாடகம் நடைபெற் றிருக்காது. பொறுப்பற்ற முறையில், மக்களுடைய உரிமையை உதா சீனம் செய்துவிட்டு, அவர்களுக்கு அநீதி இழைக்கும் திட் டத்தை நீட்டி, இதைக் கண்டு மக்கள் குமுறினால், சும்மா விடக்கூடாது கூப்பிடு 'போலீசை' என்றா கூவுவது ! இதற்கா