உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

239 நேரு சர்க்கார்! இந்த நேர்த்தியான முறையிலே ஆட்சி நடத்துகிறார் என்று மகிழ்ந்தா தம்பி, ஊரெல்லாம் உற்சவம் கொண்டாடினார்கள், மலைமகனுக்கு!? 23-10-1955. உலகெலாம் சுற்றி வரும் அந்த அன்புள்ள, Jimmy Z கடிதம்: 25 போலீஸ்! போலீஸ்! தேவிகுளம் பீர்மேடு சிறப்பும் அது பற்றிய பிரச்சினை யும் - காமராஜரின் போக்கு--அவர் தேர்தல் முறை. தம்பி, பச்சை மாமலைகள்! பாங்கான காட்சிகள்! பாடும் அருவி? பயமற்ற மிருகங்கள்! ஓங்கி வளர்ந்த மரங்கள்! தேயிலைத் தோட்டங்கள்! முக்கனி குலுங்கும் பழத் தோட்டங்கள்! தேக்கங்கள்! தேனாறுகள் !! தமிழகம் தந்திடும் எழிலோவியங்களைக் கண்டு, என்னை மறந்து கிடந்ததால், சென்றகிழமை உன்னுடன் அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றேனில்லை. மலைவளமும், காட்டு வளமும், கானாறுகளும்,களிறுகளும், மான்கூட்டமும், மலர்த்தோட்ட மும்,புரண்டோடும் பேராறுகளும், கெம்பீரமாகக் காணப் பட்ட நீர் நிலைகளும், சிந்துபாடிடும் சிங்காரச்சிற்றருவிகளும், வாளை துள்ளிடும் வாவிகள், கெண்டை புரண்டிடும் ஆறுகள், பொன்பூத்திடும் வயல்கள், தம்பி!- கண்ட காட்சிகள், எதைக் கூறுவேன்,எப்படிக் கூறினால், எழிலை விளக்கிட முடி யும்! கண்கண்டது-கருத்தில் நின்றது - கவி அல்ல பாடிக் காட்ட ஓவியனல்ல தீட்டித்தர!! அத்தகைய காட்சிகளை,