உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

240 3500 அடி உயரம் ஏறிச் சென்று கண்டிடும் வாய்ப்புப் பெற் றேன் சென்றகிழமை! சென்றது, மாநில மாநாட்டுக்கான நிதிபெற! கண்டது தமிழருக்கு இயற்கை அளித்துள்ள பெரு நிதியை!! சென்று பாண்டி மண்டலத்தில் பல்வேறு இடங்களில் பற்றும் பரிவும், பாசம் கொள்ளத்தக்க வகையிலே வழங்கிடும் தோழர்களைப் பெருமளவில் கண்டு மகிழ்ந்து விட்டு, பாண்டி நாட்டுடன் ஒட்டிக் கிடப்பினும், அரசியல் நிர்வாகத்தின் கொடுமையினால் வெட்டுண்டு கிடக்கும் பீர்மேடு தாலூக்காவி லுள்ள வண்டிப் பெரியாறு எனும் இடம் சென்று, அங்கு அரும்பாடுபட்டு, நமது அகம் மகிழும் வண்ணம் கழகத்தைக் கட்டிக்காத்து வரும் தோழர்களிடம் அளவளாவி மகிழ்ந் தேன். போலீஸ்! போலீஸ்! ! என்ற கூக்குரலை, நான் அங்கு செல்வதற்கு ஒரு கிழமைக்கு முன்பிருந்தே, ஆங்குள்ள சிலர் கிளப்பினராம்! தந்திகள் பறந்தனவாம். தடை உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி! கூட்டம் நடத்த அனுமதி தரக் கூடாது- குழப்பம் விளையும் - கொந்தளிப்பு மூண்டுவிடும் என்று கூறினராம் மலையாள நண்பர்கள்! பாவம்! அவர்கள் மருட்சி அடைந்துள்ளனர்! வண்டிப் பெரியாறு கூட்டம், தேவிகுளம், பீர்மேடு தாலூக்காக்களின்மீது தமிழரின் 'படை எடுப்பு'க்கான ஏற்பாடு என்ற அச்சத்தில்,மலையாளத் தோழர் கள் திருவிதாங்கூர் சர்க்காருக்குத் 'தந்திகள்' கொடுத்திருந்த னர். எனினும் 'பனம்பள்ளி' சர்க்கார் பதட்டம் கொள்ள வில்லை; கூட்டம் நடைபெற்றது; மலையாளத் தோழர்களுக்கு 'விளக்கம்' தரும் வேலையை ஓரளவுக்குச் செம்மையாகவே செய்து முடித்தேன். தம்பி! தேவிகுளம் பீர்மேடு வட்டாரத்திலே காணப் படும், மலைவளமும், காட்டுவளமும் உண்மையிலிலேயே, திருவிதாங்கூர் சர்க்கார் திகில்கொண்டு, தீப்பட்ட குழந்தை போல் துடிதுடித்துக் கதறச் செய்யும், வகையில்தான் அமைந்திருக்கிறது! ஏலமும், தேயிலையும்,வாழையும் வகைவகையான பயன் தரும் தருக்களும், காணக்காட்சியாக இருக்கிறது எங்கும்! அதோ ஓர் மேகக் கூட்டம்--வெண்மை நிறத்துடன்- மறு விநாடி பழுப்பேறுகிறது - மெள்ளமெள்ள அணிபணி பூண்ட ஆரணங்கு, 'ஜடை' பாரம் தாங்காமல், இடை துவள நடை பயிலும் அழகுடன் உலவுகிறது - உள்ளத்தைச் சிலிர்த்திடச் செய்யும் ஓர் மென்காற்று வீசுகிறது-உடனே கருமுகில் ஆகி விடுகிறது - சூல் கொண்ட மேகம்,மழை முத்துக்களை உதிர்த்