உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

242 சித்திரச் சோலைகளே! உமைத் திருத்த இப்பாரினிலே எத்தனை தோழர்கள் தம் இரத்தம் சொரிந்தனரோ வேரினிலே! என்று பாடியிருக்கிறாரே, அந்தக்'கவிதை'யின் முழுப்பொருள் விளங்கிற்று. புலியும் பிறவும், களிறும் காட்டெருமைகளும் ஏராள மாக உலவிடும் பெருங்காடுகளாக இருந்த நாட்களில், அந்தப் பகுதியில், தருக்களை மலைப்பாம்புகள் தழுவிக் கொண்டு கிடக் குமரம். காட்டாறுகள் சிலவேளைகளில் கரிக்குட்டிகளை உருட் டிக் கொண்டோடுமாம். அங்கு காபியும் தேயிலையும்,ஏலமும் இன்னபிறவும் பயிரிட்டுப்பணம் பண்ண இயலும் என்ற எண் ணம் எழக்கூட முடியாத நிலை இருந்ததாம்! தமிழர்கள் எடுத் துக் கொண்ட பெருமுயற்சியும், அளித்த கடும் உழைப்பும் தான்,காடு கனியும் நிலையைத் தந்தது என்று விளக்கமளித்த னர்; வியப்புற்றேன்!! காடுகளை அழித்தும் களிறுக்களை விரட்டியும், காட்டெரு மைகளால் தாக்குண்டும். கடும் புலிகளுடன் போராடியும் தமி ழர்கள் அமைத்துக்கொடுத்த இடங்களே இன்று (கண்ணன் தேவன்' தோயிலைத் தோட்டங்கள், என்றனர்! பாராட்டுவதா,பரிதாபப்படுவதா! அகமகிழ்வதா அனு தாயப்படுவதா!!-என்று தெரியாமல் திகைத்தேன்! தமிழர் பலரின் இன்னுயிரைக் குடித்து விட்டுத்தான், தோட்டங்கள் துரைமார்கள் கொழுத்திடத்தக்க செல்வத்தைக் கொடுத்துள் என!! நான் சென்று அன்றிரவு தங்கி இருந்த இடத்துக்குப் பெயரே, ஆனைக்கல் என்றால், தம்பி! இடத்தின் முன்னாள் இயல்பு எவ்வண்ணம் இருந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாமல்லவா-ஓரளவுக்கேனும். அன்றிரவு கூட்டம் முடிந்தது,'ஆனைக்கல்' தோழர் லியான் அவர்களுடைய இல் லத்தில் அன்பு விருந்து உண்டான பிறகு. இரவு எட்டுமணிக் குக் ‘கீழே' செல்ல விரும்பினேன் -தோழர் லியான், வேண் டாம் மூடுபனி பாதையைக் குறுக்கிடக்கூடும், அதுகூடப் பர வாயில்லை, வழிதவறி வரும் யானை குறுக்கிடும்,பிறகு என்று பீதியுடன் கூறினார்- நான் தைரியமாக வாதாடிவிட்டு, பாதுகாப்பு உணர்ச்சியுடன் பயணத்தை ரத்து செய்துவிட்டு. இரவுப் போதை அங்கு கழித்துவிட்டு, விடிந்தபிறகுதான் பயணத்தைத் துவக்கினேன். ஆனால், தோழர் லியான் எதிர் பாராத வேறோர் ஆபத்து குறுக்கிட்டது - அது கூறுமுன், தம்பி, வேறுசில கூறி விடுகிறேன். தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, சித்தூர் எனும் தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் சேர்த்தாக வேண்டும்என்