உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை


பதிப்புரை

பத்திரிகைக் கடைகளில் "திராவிடநாடு' வருவதை ஆவலோடு எதிர்பார்த்திருந்து, வந்ததும், அதில் 'தம்பிக்கு' வந்திருக்கிறதா எனப் பார்த்து, அதைக் கடைமுன்னாலேயே நின்று ஆர்வத்தோடு படிக்கும் தம்பிமார் பலரைப் பார்த்திருக் கிறேன். அதில்வரும் - கருத்தோவியங்களை மனப்பாடம் செய்து, பொன்மொழிகளாகச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கும் தம்பிகளையும் கண்டிருக்கிறேன். 'திராவிடநாடு' இதழ்களைப் 'பைண்டு' செய்து, அதில் கடிதப் பகுதிகளைக் கோடிட்டு வைத்து, நினைக்கும் போதெல்லாம் படித்துப் படித்து மகிழும் தம்பிகளையும் கண்டிருக்கிறேன். இக் கடிதங்கள் இளைய தம்பி மார்கள் உள்ளங்கள் தோறும் நிறைந்திருப்பதுபோலவே தலைவர்களையும் கவர்ந்திருக்கிறது என்பதை நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இந்நூலுக்கு வழங்கியுள்ள முன் னுரையில் கண்டு இன்புற்றேன். தம்பிமார்களையும் தலைவர் களையும் ஒருங்கே கவர்ந்துள்ள இக் கடிதங்களை நூல்வடிவில் வெளியிடும் வாய்ப்பு எங்கள் நிலையத்துக்குக் கிடைத்திருப் பதை எண்ணி இன்பம் அடைகின்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் 1955-ஆம் ஆண்டிலிருந்து 'திராவிடநாடு' இதழில் இக்கடிதப் பகுதியைத் தொடங்கி எழுதி வருகிறார்கள். இவை வாரந்தோறும் தொடர்ந்து வெளிவரவில்லை. சில வாரங்கள் தொடர்ந்தும், சில சமயங் களில் இடையிடையேயும், ஒருசில சமயங்களில் நீண்டநாட்க ளுக்குவராமலும்கூடஇருந்திருக்கின்றன. இதில் நாடு, மொழி, அரசு, சமயம், சாத்திரம், கலை, விஞ்ஞானம், நாட்டு நடப்பு போன்ற பலதுறைச் செய்திகள் பற்றியும், கழகத் தலைவர்கள் கழகத் தோழர்கள், தமது நண்பர்கள், உலகத் தலைவர்