உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

பற்றிய தமது கருத்துக்களையும், கழகப்பணி வெற்றிபெற - அதன் உயர்ந்தநோக்கங்கள் நிறைவேறக் கழகத்தொண்டர் கள் நடந்துகொள்ள வேண்டிய முறை-செய்ய வேண்டிய தியாகம் - ஆற்றவேண்டிய தொண்டுகள் பற்றியும் குறிப்பிட் டுள்ளார்கள். இவற்றை அந்த அந்தத் துறைகளுக்கு ஏற்பத் தனித்தனியாகப் பிரித்துத் தனித்தனி நூலாக வெளியிட எண்ணி இருந்தேன்.அப்படிச்செய்வதால் நாட்கள் கழிவதை எண்ணி, முதலில் 'திராவிடநாடு' இதழ்களில் வெளிவந்த வரிசைப்படி வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறேன். இதுவரை வெளிவந்துள்ள கடிதங்கள், 250 பக்கங்கள் கொண்ட தொகுதியாகப் பத்துத் தொகுதிகள் வெளிவரும் அளவிற்கு உள்ளன. தற்பொழுது முதல் இரண்டு தொகுதிகள் வெளி வருகின்றன.தமிழ்ப் பெருமக்களின் பேராதரவினால் மற்றத் தொகுதிகளையும் விரைவில் வெளிக்கொண்டுவர முனைந்துள் ளேன். அறிஞர் அண்ணா அவர்கள் முன்னமே அவர்களுடைய நூல்களை வெளியிட எங்கள் நிலையத்திற்கு வாய்ப்பளித்தார் கள். இக்கடிதங்களையும் நூல்களாக்கி வெளியிட இசைவளித் துள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றியையும் வணக்கத் தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நாவலர் நெடுஞ் செழியன் அவர்கள் இந்நூலுக்கு முன்னுரை அளித்து எங்க களைப் பெருமைப் படுத்தியுள்ளார்கள். திரு. டி. எம். பார்த்த சாரதி அவர்கள் இந்நூல் வரிசை உருப்பெறுவதில் எங்களுக் குப் பலவகையிலும் உதவியுள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரி நிலையம், சென்னை-1. 7-1-263 க.அ.செல்லப்பன் .