உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

51 மூக்காலே அழறியே. எடு! எடு! கொடு! கொடு! நேரமா வுது, ரயிலுக்கு என்று பேசி நகையைப் பறித்துக் கொள்ள வும், அதைக் கிண்டி ரேசுக்குப் பயன்படுத்தவும், பயிற்சி பெற்றுவிட்டான். முரட்டுத்தனமாக அவன் இருந்த போதாவது பரவா யில்லை.அடி உதை கிடைத்தாலும், அண்டை அயல் பஞ்சா யத்துக்கு வருகிற முறையில், அழுகுரல் கிளம்பி இருக்கும். சில வேளைகளில், அதற்கு அஞ்சி, அவன்,புற்றுக்குள் புகுந்து கொள்ளும் பாம்பாகிவிடவும் கூடும். மானே!தேனே! என்று அவன் தித்திப்பு ஊட்டும்போது, பாபம், அவள் தப்ப வழியே கிடைக்காதல்லவா! ஆதிக்கக்காரர்களின் போக்கிலே இப்போது இதுபோன்ற மாறுதல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது-இதன் பயனாக ஆபத்தும் வளர்ந்துகொண்டிருக்கிறது. புலி, உறுமும் - அந்தச் சத்தம் கேட்டு, கிலி பிறப்பினும், ஒரு படை திரட்டிவிடவும், அதை வேட்டையாடிக் கொன்று போடவும், வழியும் கிடைக்கக்கூடும். ஆனால், முல்லை பறித் திட மலர்த்தோட்டம் சென்று, பச்சைப் பட்டோ என்று பரவசப் படத் தக்க பசும் புற்றரையில் நடந்து செல்லும் போது, அரவமின்றி ஊர்ந்து வந்து தீண்டிடும் நாகமாக இருந்தால், என்ன கதியாவது? ஆதிக்கக்காரர்கள் புலியாக இருப்பதாலே ஏற்படும் ஆபத்தை உணர்ந்து கொண்டு, இப்போது புற்றரைப் பாம் பாகி இருக்கிறார்கள். எல்லோருமே அவ்விதம் எப்போதுமே அவ்விதம், என்று சொல்லவில்லை; இப்போதும் பழைய முறையே சாலச் சிறந் தது என்று எண்ணும், போர்ச்சுகீசிய ஆதிக்கக்காரர் இருக் கத்தான் செய்கிறார்கள் - கொக்கரிக்கிறார்கள், சுட்டெரிக் கிறார்கள். ஆனால் குறிப்பிடத் தக்க அளவிலே, புலி, பாம்பாகிவிட்டிருச்கிறது. கதை படித்திருப்பாயே, சிறு வயதில்? பல்லின் கூர்மையும், நகத்தின் கூர்மையும் பட்டுப்போன கிழப்புலி பாய்ந்து சென்று தாக்கி, பிய்த்து ரத்தம் குடித்துப் பசி தீர்த்துக் கொள்ள முடியாது என்று தெரிந்துகொண்டு தங்கக் காப்பைக் காட்டி, ஆசையை மூட்டி, அருகே வரு பவனை அடித்துத் தின்றது, என்றோர் கதை உண்டு. பேராசைக்காரப் பார்ப்பான் ஒருவன். இப்படி ஒரு கிழப் புலியிடம் சிக்கிக் கொண்டான் என்பது கதை. பேராசைக்காரப் பார்ப்பான் என்று சொல்லக்கூட, இந்த சர்க்காரிலே அனுமதி கிடைக்காது போலிருக்கிறது, தம்பி!