உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50 "கொழந்தே, உனக்கு மிட்டாய் வேணுமா, ஊதுங் கோல் வேண்டுமா, ஆடும் குதிரை, பாடும் பறவை எல்லாம் வாங்கித் தரட்டுமா?" "மிட்டாயா, வாங்கிக் கொடுங்கோ மாமா, எனக்கு ரொம்ப இஷ்டம். "கடைத் தெருவுக்குப் போகலாம வா, கண்ணு.' "ஐயோ, அம்மா அடிக்குமே. நான் போய் அம்மாவிடம் சொல்லிவிட்டு... களே, அம்மாவிடம் சொன்னா, உன்னை அனுப்பமாட்டாங் மிட்டாய் தின்னப்படாதுன்னு சொல்லுவாங்க." "அம்மாவுக்குத் தெரியாமெ, ஓடிப்போய் மீட்டாய் வாங் கிக் கொண்டு வந்துவிடலாமா?>" நஞ்சு நிறை நெஞ்சினன் என்பதறியாத அந்தப் பிஞ்சு, வயலோரத்தில்கசக்கிப்போடப்படுகிறது-கையிலே மிட்டாய் இருக்கிறது- ஆனால் கைவளையும் காது லோலாக்கும் இல்லை. திருவிழாக்களின் போது கேள்விப்படுகிறோம், இது போன்ற நிகழ்ச்சிகளை. கனி மொழி, சுவையுள்ளதுதான். ஆனால் நஞ்சுக்கு அதனை உரையாக்கிடும்போக்கினரும் உண்டு-எனவேதான் எச்சரிக்கையாக இருக்கவேண்டு மென்கிறார்கள். அழகும் மணமும் கொண்ட செந்தாழை இருக்கிறது பார் தம்பி, அதிலே, இதழ்களின் இடையே, ஒட்டிக்கொண்டிருப் பதுண்டாம் சிறுநாகம் - தீண்டினால் தீர்ந்து போவார்களாம்! அதனால், அனுபவமுள்ளவர்கள் செந்தாழையைப் பிரித் தெடுக்கும்போது,ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பர். தம்பி, முரட்டுத்தனத்தினாலே மட்டுமே, தீயகாரியங் களைச் சாதித்துக்கொள்வது என்ற முறை, இப்போது வெகு வாகக் குறைந்துவிட்டது-தீய காரியம் குறையவில்லை!. முறை மாறிவிட்டிருக்கிறது. "கழட்டடி கழுதே! உங்கள் அப்பன் வீட்டிலே போட்டா என்னவாம்? இப்ப கழட்டிக் கொடுக்கறயா, இல்லையானா, இடுப்பை முறிச்சிக்கப் போறியா?" இந்தக் "கணவன் இப்போது- "என்ன செய்யறது; வேற எங்கேயும் கிடக்கலையாம், என் உயிரை வாங்கறான் வேலாசாமி. கலியாண வேலையை முடிச்சிட்டு உடனே திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்னு கெஞ்சறான்; பரிதாபமாயிருக்கு; நம்மிடம் இருக்கவே நானும் அவனுக்கு வேண்டியவனாக இருக்கிறதாலே, ஒரு நாலு நாளைக்கு இரவல் கொடுன்னு கேட்கறான்.இதுக்கு என்னமோ