உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

49 சாலையிலே, சோலையிலே, ஆற்றோரத்தில், அக்கிரகாரத் தில், பத்திரிகை நிலையத்தில், கமிட்டிக் கூட்டங்களில், வியா பாரச் சங்கத்தில், விசேஷ மாநாடுகளில், அமைச்சர் மாளி கையில், அரசாங்க அலுவலகங்களில், எங்கும் பேசப்படும் பிரச்சினையாகிவிட்டது - எங்கும் நிறைநாதமாகிவிட்டது- செங்கொடிக்காரன் இடம் தவிர. அவர்களுக்குப் பாவம், ஒரே அதிர்ச்சி, அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி, எனவே இந்த எழுச்சி புக இடமில்லை - நேரமுமில்லை. அந்த ஒரு இடம் தவிர, மற்ற எல்லா இடத்திலும், சிந்தனையைக் கிளறி விட் டிருக்கிறது நாம் எடுத்துக் காட்டியிருக்கும் பிரச்சினை. ஐயே! உங்களைத்தான், காதிலேயே விழலையா நான் கூப்பிடறது- இந்தாருங்கோ காப்பி!-என்று கதவிற்குப்பின் புறம் மறைந்து நின்றபடி, காரிகை அழைக்கும் காட்சி தெரிகிறதா, கைவளை ஒலி கேட்கிறதா!! 12-6--1955 தம்பி, அன்புள்ள, Jimmynz மானே! தேனே!! கடிதம்-6 தென்னவர் பற்றி வடவர் பசப்பு! திராவிடத்தின் சிறப்பு - வட நாடு, தென்னாடு வேற்றுமை - "ஏனோதானோ" என்று அந்நாள் வரை இருந்து வந்தவன், 'மானே! தேனே!' என்று மயக்க மொழி பேசி னான். அடிமூச்சுக் குரல் அன்பின் அறிகுறியாக மட்டுமல்ல, நம்பினோரை நாசமாக்கவும் பயன்படும் என்பதை அறியாமல், நாரீமணி, பூங்கொடி தென்றலில் ஆடுவது போலானாள். புது வாழ்வு பிறந்தது என்று எண்ணிக் கொண்டாள். அவனோ, அவளை இன்பபுரிக்கு அழைத்துச் செல்லவில்லை; அவளிட மிருந்து இருபது பவுன் "செயினைப் பெற்றுக்கொண்டு, நடையலங்காரி ஒருவளை நாடிச் சென்றான்! கதை, தம்பி கதை. காதலின்பம் பெறவேண்டிய காரிகையர் சிலர் கருத்தழிவதைக் காட்டும் கதை.