உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48 தம்பி1 எப்படி, எந்த இடத்திலிருந்து நமது பிரச்சாரம் பலன் அளித்திருக்கிறது பார்!] காரம் இல்லை என்பாய் - ஆமாம்-எப்படி இருக்கமுடியும் இப்போது? பட எழுதுகிற பாணிகூட அரசியல் எழுச்சி ஊட்டத்தக்க தாக இல்லை-தெரியாததால் அல்ல, ஏ அப்பா ! வெளிநாட்டு விவகாரங்களைப் பற்றி எழுதும்போது பார், புரட்சி மெடுத்தாடும் இந்த ஏடுகளில்! ஆனால் நேருஜியை பற்றி எழுதும்போது, நாம் நெளிய வேண்டியிருக்கிறது, " நெஞ் சில் இடம் கொண்டான்" ஆயிற்றே அதனால். அவளுக்குத்தானா கண்ணா? பாரிஜாதம்! எனக்குக் கிடையாதா! என்னிடம் அன்பு இருந்தால் எனக்குப் பாரி ஜாதம் தரவேண்டும்' என்று, ராதா கேட்கிறாள் கண்ண னிடம். பாரிஜாத புஷ்ப ஹரணம் பார்த்திருப்பாயே நாடகம். பத்துப்பதினைந்து வருஷங்களுக்கு முன்பு நடக்கும். அந்தப் பாணியில் எழுதுகிறது விகடன் - என்றாலும், விஷயத்தைச் சொல்ல வேண்டிய கட்டம் வந்துவிட்டது அல்லவா, இதற் காக நாம் பட்ட கஷ்டம் கொஞ்சமா? எல்லாத் தொழிற்சாலையும் வடநாட்டில், தென்னிந்தியா அலட்சியப்படுத்தப் படுகிறது. விகடனிடமிருந்து இந்தக் கருத்துரை-இடித்துரை- வருமென்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்? திராவிடம் என்ற சொல்லையே கூற் முடியவில்லை விகடனால். தென்னிந்தியா என்று எழுதுகிறது,-பரவா யில்லை. அதனால் என்ன-அத்தான் என்று அன்பு சொட்ட அழைத்திட ஆரணங்கால் முடிகிறதா? "அப்பா எங்கேடா கண்ணு!” என்று குழந்தையைப் பார்த்துக் கேட்பதுதான் தெரியுமே நமக்கு. அதுபோல் இது என்று எண்ணிக் கொள் வோம். விகடன் மட்டும் அல்ல, வேறு வேறு வேலையாகக் கூறி டும்போது, யாராருக்கோ இந்தக் கருத்துதான் வருகிறது! யார் உள்ளத்தையும் இந்தக் கருத்துச் சும்மா விடுவதில்லை. புகுந்து குடைகிறது!? தங்களுக்கு இப்போதுள்ள அதிகாரம் போதாது, மேலும் சில பல அதிகாரம் வேண்டுமென்று கேட்க மாநாடு நடத்துகி றார்கள், சென்னை ராஜ்ய நகராட்சி மன்றத் தலைவர்கள்! அங்கு "ஏகமனதாக" நிறைவேறியிருக்கும் தீர்மானம் இது தான் - முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது எல்லா பெரிய தொழிற்சாலுைம் வடநாட்டிலேயே அமைத்து விட்டார்கள். இந்த இரண்டாவது திட்டத்திலாவது தென்னாட்டில் அதிக மான பெரிய தொழிலும், திட்டமும் வேண்டும்.