உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47 காதல் கனிரசமா, துவக்கத்திலேயே கிடைத்துவிடுகிறது, கடைக்கண் வீச்சுதானே, தம்பி, அது என்ன சாமான்ய மானதா!! எத்தனை இன்பக் கனவுகளைக் கிளறிவிடுகிறது!! அதுபோலத்தான், இந்த இதழ்கள் அச்சத்துடனும், கூச்சத்துடனும் இப்போது எழுதுவது!! யாராவது பார்த்துவிட்டால்!! வெட்கமாக இருக்கிறது!; உஹும், நாளைக்கு! சோலையில்!? என்று கொஞ்சுமொழி பேசி விட்டுக் காதலன் பிடியிலிருந்து தப்பிச் செல்லும் தத்தை, என்று வைத்துக்கொள்ளேன்! சமயம் கிடைக்கும் போதெல்லாம், இந்த ஏடுகள் இப் போது மத்திய சர்க்காரின் போக்கைப் பற்றி எழுதுகின்றன- கவனித்தாயா!! அரித்துவாரம் பற்றிப் பேசிய நேரு பண்டிதர், புண்யஸ் தலம் என்பதுபற்றி தமது கருத்துரையை அளித்தவரல்லவா. அதையே, சாக்காக வைத்துக் கொண்டு ஒரு காங்கிரஸ் ஏடு மத்தியச் சர்க்காரின் போக்கை இடித்துரைத்திருக்கிறது. கன்னத்தில் இடித்து "காலை பிறந்ததும் என் நினைவே போய்விடு மல்லவா, கண்ணாளா" என்று கேட்கும் காரிகை போல, கதைகளில் இந்த ஏடு எழுதுகிறது - இத்தனைக்கும், விகடன் செய்யும் வேலையை மேற்கொண்டுள்ள ஏடுதான்!! ஆனந்தவிகடன், அது எழுதுகிறது. "அரித்துவாரம் இந்துக்களின் புண்யஸ்தலமாகக் கருதப் பட்டு வருகிறது. ஆனால் எனக்கு நாட்டில் எங்கெங்கு அபி விருத்தி வேலைகள் நடந்து வருகின்றனவோ அந்த இடங்களே புண்யஸ்தலங்களாகத் தோற்றமளிக்கின்றன என்று கூறித் தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் அனைவரும் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். புண்யஸ்தலங்கள் என்னும்போது வட இந்தி யாவை விடத் தென் இந்தியாவிலேயே இவை அதிகம் என்று கூறலாம். எனினும் பொருளாதாரத் துறையில் தென்னிந்தியா பின்னணியிலேயே இருந்துவருகிறது. முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயும், தென்னிந் தியா நேருஜியின் அர்த்தப்படி புண்யஸ்தலங்களாகச் சீர்படவில்லை. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத் லேயும் தென்னிந்தியா பொருளாதாரப் புண்யஸ்தல மாகத் திகழும் பாக்யம் பெறாதோவென ஐயுற வேண்டி யிருக்கிறது. பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் வட இந் தியாவிலேயே நிர்மாணிக்கப் படுவதைப்பற்றியும், தென் னிந்தியா அலட்சியம் செய்யப்படுவதைக் குறித்தும் வினவினால், நிதி மந்திரி தேஷ்முக் உட்பட இந்திய சர்க்கார் மந்திரிகள் அனைவரும் சரியான பதில் அளிப்பு தில்லை.