உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

53 தலைவர்கள் பெற்றனர் - அப்படிப்பட்டவர்கள், கனிமொழி பேசித்தான் காரியத்தைச் சாதித்துக் கொள்ளவேண்டும் என்று முறை அமைத்துக் கொள்வதிலே, ஆச்சரியம் என்ன இருக்கிறது. வெள்ளையன் இங்கு நுழைந்த நாளிலிருந்து வெறியேறிய நாள் வரை, நடை, நொடி, பாவனை, மதம், மொழி, வாழ்க்கை, வழி ஆகிய எல்லாவற்றிலும்தான் வேறுபட்டவன் மட்டுமல்ல, மேம்பட்டவன் என்று நம்பிக்கொண்டிருந்தான்; கூசாமல் சொல்லியும் வந்தான். வடநாட்டுத் தலைவர்கள் அப்படியல்ல - காங்கிரஸின் துணைகொண்டு, "பந்த பாசம்" இருப்பதாகச் சொல்லி, பாரத தேசம், பாரத மக்கள், இந்தியர் என்ற இனிப்புப் பண்ட மளித்து, திராவிடரை மயக்கி வைத்திருந்தனர். நாடகங் களிலே பார்க்கிறோமல்லவா இருவகையான கொலைக் காட்சி கள் - ஒன்றில், வாள் வாளைச் சந்திக்கும், இரத்தம் கொட்டப் படும், ஓடிஓடிப் போரிடுவர், உயா இருந்து கீழே குதிப்பர், கூடம் களமாகும், எதிரேயிருக்கும் சாமான்கள் உடைபடும், கடைசியில் ஒரு கொலை! மற்றோர் வகையிலே, வாள் உறை யிலே தூங்கும், வாட்கண் அவன் நெஞ்சத்தைத் துளைக்கும்; அவள் இடை அசையும், இவன் இதயம் விம்மும்; அவள் கடைகாட்டுவாள், இவன் கருத்திலே ஏதேதோ கொந்தளிக் கும்: கண்ணாளா! என்பாள்; இவன் கட்டிக் கரும்பே! என் பான்; மாமோகம் கொண்டேன் என்பாள்; இவன் கனவல் லவே கட்டழகி! என்று குழைந்து கூறுவான்; அவள் புன் னகை புரிவாள். இவன் புத்தி தடுமாறும்; அவள் இதோ கனி ரசம் என்று அளிப்பாள், அவன் அவள் கரம் தொட்டு அதைப் பெற்றுப் பருகுவான், கண்ணிலே ஒரு திரை போடுவது போலாகும், கால் நடுங்குறும், அழகால் அழிவு தரும் ஆர ணங்கை ஆசையுடன் பார்த்தபடி அருகே நெருங்குவான்; அவள் "இலாவகமாக" ஒதுங்கிக் கொண்டு ஒரு பசப்புச் சிரிப்பொலி கிளப்புவாள்; இதற்குள் இவன் பார்வை மங்கும், பூமியில் கால் பாவாது, கீழே சாய்வான், பிணமாவான்! தென்னாட்டவர், தீரர், வீரர், தேச பக்தர்! தென்னாட்டவர்,என்னாட்டவரும் வியக்கத்தக்க நுண்ண றிவு படைத்தவர்கள்; எதையும் சாதிக்கவல்லவர்கள். எத்துணை கஷ்டத்தையும் பொருட்படுத்தாதிருக்கும் நெஞ் சுரம் கொண்டவர்கள். தென்னாட்டவருக்கு எத்தனை மொழி கற்பதானாலும், சிரமமிராது - பாண்டித்யம் பெறமுடியும்.