உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54 தென்னாட்டவர் இந்தியைக் கற்பது மட்டுமல்ல, வெகு விரைவில் வடநாட்டுக்கே இந்தி ஆசிரியர்களாகி விடக்கூடிய திறமைசாலிகள்! தென்னாடு! அறிவாளிகள் நிரம்பிய இடம்! எல்லாக் கலையும் கொஞ்சி விளையாடும் பூந்தோட்டம் தென்னாடு! அழகிய மங்கையரின் முக விலாசமும், அறிவாளர்களின் முக தேஜசும், இயற்கை எழிலுடன் சேர்ந்து, தென்னாட்டைக் காந்தர்வபுரி யாக்குகிறது! தென்னாட்டின் அருமை பெருமைகளை அறியாதார் அறி யாதாரே? முல்லை காட்டி, பாகு கலந்த சொல்லமுது ஊட்டி, பாவை பம்பரமாக ஆட்டிவைக்கிறாள்! மாவ்லங்கர், தத்தர், தேபர், மகதாப் என்று வந்த வண்ணம் இருக்கிறார்கள் வட நாட்டுத் தலைவர்கள், இத் தகைய மயக்க மூட்டும் நோக்குடன். தேச ஒருவர் இயற்கை வளத்தைப் புகழ்கிறார். இன்னொருவர் மொழி வளத்தைக் கண்டு வியப்படைகிறார். சேவையை பாராட்டித் தேன் கொட்டுகிறார் ஒருவர். தெய்வ பக்திமிகுந்த இடமல்லவா என்று பரவசம் பாய்ச்சுகிறார் இன் னொருவர். அனைவருக்கும் ஒரே நோக்கம். ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது என்பதுதான்! அதற்கு ஆர்ப்பரிப்பு பலனில்லை, அன்பு ஆலாபனமும், புகழ் பல்லவியும் தாஜா" செய்யும் தாளமும் தேவை என்பது முறையாக்கப் பட்டிருக் கிறது. பன்னெடும் காலமாகவே திராவிடர், இப்படி பசப்பு வோரிடம் நம்பிக்கை வைத்து நாசமாகி இருக்கிறார்கள். இல்லையானால், காய்ந்த புல்லைக் கையிலே கொண்டிருந்த கூட்டத்திடம், கட்கமேந்திப் போரிடுவதைக் காதலுக்கு ஈடான நிலையில் வைத்துப் புகழ் ஈட்டிய திராவிட இனம், அடிமைப் பட்டிருக்கவே முடியாதே! வடநாடு, ஒழுங்கு முறைக்கு உட்படுத்தப்படாமலிருந்த நாட்களிலேயே, இங்கு திராவிடம் ஒழுங்கு படுத்தப்பட்டு, ஒழுக்கத்தை ஓம்பி வளர்த்திடும் திருநாடாக இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. செல்வம் கொழிக்கும் நிலையும், செங்கோல் ஓச்சும் மன்னர் களும் பெற்ற நிலையில், வடநாடு சித்தரிக்கப்படும் கட்டத் தைக்கூட, வேண்டுமானால் திராவிட நாட்டு வரலாற்றுச் சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லு, தம்பி, திராவிடத்தின் தனிச் சிறப்பு விளக்கமாகத் தெரியும்.