உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

தம்பி, காகிதக் கப்பலில் கடிதம்: 1 கவனம் செலுத்தாதே தம்பி இரண்டாவது மாநில மாநாடு- பொதுச் செயலாளர், நாவலர் நெடுஞ்செழியன் "கப்பலிலா போகப்போகிறீர்கள் - எந்தெந்தத் தேசம் - எவ்வளவு நாளாகும் திரும்பிவர -மாநிலமாநாடு நடைபெற வேண்டுமே'--என்றெல்லாம் கேட்டிருக்கிறாய்,-கனிவு ததும்பும் கடிதம் மூலம். தினத்தந்தியிடம் மட்டும் சொல்லி விட்டா நான் வெளிநாடு பயணமாவேன்-உன்னிடம் கூறா மலா- என் உள்ளத்துக்கு மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டும் தம்பிமார்களின் 'அனுமதி' பெறாமல், வெளிநாடு போகத் தான் முடியுமா? ஆமாம் - வெளிநாடுகளுக்குப் போய்வருவது என்பது என்ன எளிதான காரியமென்றா எண்ணுகிறாய்-பத்திரிகை களில் தலைப்புப் போடுவதும்-படம் போடுவதும் எளிது- பாஸ்போர்ட் கிடைப்பது அவ்வளவு எளிது என்றா எண்ணு கிறாய்! நான், அவ்வளவு சுலபத்தில் பாஸ்போர்ட் கிடைத்து விடும் என்று எண்ணவில்லை. வேண்டுமானால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு 'பாஸ்போர்ட் கேட்டால் கிடைக்கக்கூடும்! பிறகு? பணம்வேண்டும். 'பாஸ் போர்ட்' போலவேதானே அதுவும். "அண்ணா! இப்படியா கூறுவது, நாங்கள் இருக்கி றோம்" என்று, அடுத்த கடிதத்தில் எழுதிட எண்ணுவாய்