உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10 ஆனால், முதலில் பணம் திரட்டு தம்பி, என் வெளி நாட்டுப் பயணத்துக்காக அல்ல, மாநில மாநாட்டுக்கு! ரூபாய் இருபத்து ஐயாயிரம் தேவை! ஒரு ஆயிரம் மட்டுமே தரப்பட்டிருக்கிறது - இந்த இலட் சணத்தில், பொருளாளர் என்று பட்டம் தரப்பட்டுவிட்டிருக் கிறது. நான் வெளிநாட்டுக்கு போவது என்பது இப்போதைக்கு இல்லை - இருபத்து ஐயாயிரம் சேர்த்து-இரண்டாவது மாநில மாநாட்டைச் சிறப்புற நடத்திவிட்டு, பொதுத் தேர் தல் குறித்துக் கலந்தாலோசித்து, பணியாற்றிவிட்டு - பிறகே வெளிநாடு-இடையில் சிறைக்குள் தள்ளப்படாமலிருந்தால்! எனவே நடைபெற வேண்டிய காரியத்தைக் குறித்து, நண்பர்களுடன் கலந்தாலோசித்துக் காரியமாற்று; நான் போகும் கப்பல் தினத்தந்தியில் படமாக வரும்-வேடிக்கை யாகப் பார்த்துக் கொள்ளலாம்! நடைபெற்றாகிவிட்ட பிறகு, சர்வசாதாரணமாகத் தோன்றும்; ஆனால் சிறிது எண்ணிப் பார்த்தால் தான், நாம் எவ்வளவு அருமையான கட்டம்' வந்திருக்கிறோம் என்பது விளங்கும். நாவலர் நெடுஞ்செழியன், இப்போது நமக்குப் பொதுச் செயலாளர்! தஞ்சையிலும் மதுரையிலும் நான், பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, புயலே கிளம்பிற்று- எனக்குச் சிறிது சீற்றம் கூடப் பிறந்தது. ஆனால் மெள்ளமெள்ள ஆனால் வெற்றிகரமாகச் சபலத்தைக் கடந்து விட்டோம். கழகம் புதியதோர் கட்டம் வந்து சேர்ந்திருக்கிறது - நாம் வலிவும் பொலிவும் கொண்டதோர் அமைப்புப் பெற்றிருக்கி றோம் என்கிற நம்பிக்கை நமக்கெல்லாம் ஏற்பட்டுவிட்டது பெருமைக்குரிய செய்தி. தோழர் நெடுஞ்செழியன் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது இரண்டாண்டுக் காலமாகவே என் உள்ளத்திலே வளர்ந்த வண்ணம் இருந்த எண்ணம். ஓராண்டுக்கு முன்பு இலங்கை 'சுதந்திரன்' ஆசிரியர் சென்னை வந்திருந்த போது, அவரிடம் கூறினேன்-அவர் தமது இதழில் வெளியிட்டிருந்தார். நான் மட்டுமல்ல, நமது கழகத்திலே பெரும்பாலான கள் புதிய பொதுச் செயலாளராகத் தோழர் நெடுஞ்செழியன் வர வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றனர்.