உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

இந்த எண்ணம் எனக்குத் தோன்றிய நாள்தொட்டு நான் தோழர் நெடுஞ்செழியனை இந்தப் பொறுப்புக்குப் பக்கு வப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு, அவருடைய இல் லத்தை என் இருப்பிடமாக்கிக் கொண்டேன்!' சிறிதளவு, என்னிடம், பழகுவதில் கூச்சமுள்ள சுபாவம் அவருக்கு- எனவே, அவருடைய இல்லத்தை இருப்பிடமாக்கிக் கொண் டால்தான், என் எண்ணங்கள், நான் சரியென்று கருதும் முறைகள், என் ஆசைகள், எனக்குள்ள அச்சங்கள், இவை பற்றியும், துணைக்கழகங்கள், துளைக்கும் கழகங்கள், தூது விடும் கழகங்கள், வம்புக்கு இழுக்கும் கழகங்கள் ஆகியவை பற்றி என் கருத்து யாது என்பது பற்றியும், உரையாடி உரையாடி எடுத்துக்காட்ட முடியும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, அவர் வீட்டுச் சைவத்தைத் தாங்கிக்கொண் டிருந்தேன்!! அவரிடம் நேரடியாகக்கூட பிரச்னைகளைப்பற்றிப் பேசுவ தில்லை - பிரச்னைகளை நான் மற்ற நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் உடன் இருப்பார்! மிக முக்கிய மான கட்டங்களின் போது, புன்னகையாவது பிறக்கும், புரு வத்தையாவது நெறிப்பார்! இவ்வண்ணம் இரண்டாண்டுகள். துவக்கத்திலே நான் கொண்ட நம்பிக்கை வளர்ந்து, கனியாகி விட்டது. நமது கழகத்தை அதன் கண்ணியம் கெடாத வகையில் மட்டுமல்ல, வளரும் வகையில், நமது புதிய பொதுச் செயலாளர் நடத்திச் செல்வார் என்ற உறுதியை என்னால் நிச்சயமாக அனைவருக்கும் அளிக்க முடியும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேதான் நான் நெடுஞ் செழியனைக் கண்டது. உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் - நல்லவேளை அவருடைய துணைவியார் கண்டதில்லை என்று எண்ணு கிறேன் - தாடியுடன் நெடுஞ்செழியனை! அப்போது, தோழர் அன்பழகன் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றி வருபவர் - தோழர் நெடுஞ்செழியன் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருக்கும் போக்கினராகத் தோற்ற மளித்து வந்தார். நான் அப்போது தோழர் அன்பழகன், கல்லூரியிலிருந்து வெளியேறியதும் கழகத்தில் வந்து சேரு வார், தோழர் நெடுஞ்செழியன் எங்காவது கல்லூரியில் கம்ப னின் கவித்திறமை பற்றி (கட்டாயத்தாலும்) இளங்கோ அடி கள் பற்றி (விருப்பத்துடனும்) எடுத்துரைத்துக் கொண்டு, தமிழின் எழிலைக் கண்டும் காட்டியும் பணியாற்றி வருவார் என்றே எண்ணிக்கொண்டேன். அதுபோல நடந்திருக்கக் கூடாதா என்று ஆயாசத்துடன் கேட்கும் அவர் துணைவியார் தெரிகிறார்கள்!! என்ன' செய்யலாம்! அவரோ புயலில் குதித்து விட்டார்!!