உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12 தமிழ் எப்படி எப்படி பேசுவதற்குரியது, இலக்கியம் பேச் சுடன் கலந்து வருமபோது எத்தகைய இன்பமளிக்கும் என் றெல்லாம நான் பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு - மன திலே உருவெடுத்துக கொண்டிருந்த ஆசை நடமாடக் கண் டேன், தோழா நெடுஞ்செழியன, கழக மேடையில் பேசத் தொடங்கியதும். கருவூர் ஆற்று மணலில் - நினைவிருக்கிறது - பெரி யாரும் இருந்தார் -தோழர் நெடுஞ்செழியன் இலக்கியத்தை இனிய முறையிலே எடுத்தளித்தார். நல்ல விருந்து- ஆயினும் என்ன செய்வது? நாளாவட்டத்தில், தரத்தைச் சிறிதளவு தளர்த்தச் சொல்லி வற்புறுத்த வேண்டித்தான் வந்தது. தரத்தை வளரச் செய்யும் போக்கிலா ஆளவந்தார் கள் நமமை விட்டு வைக்கிறார்கள்!1 நடை இருக்கட்டும், நணபரின் திறம் இருக்கிறதே, அது கண்டு நான வியப்புற்றேன். என்னிடம் இல்லாத -நான் விரும்பாததால் அல்ல, இய லாததால் - ஒரு அருங்குணம் அவரிடம் உண்டு- கண்டிருப் பீர்கள். ஓயாது உழைப்பது! எப்போதும் எஙகேயும் எதை யாவது, எப்படியானது செயது கொண்டே இருப்பது. என் னாலே இதைக் கண்டு இரசிக்க முடியும் -ஆனால் என்னை அந் நிலைக்கு மாற்றிக் கொள்ள இயலவில்லை. நான் அடிக்கடி கனவு காண்கிறேன், சோலையில் சொகுசாக உலவுவதுபோல அல்ல - அந்தக் காலம் மலை ஏறிவிட்டது பொதுப் பிரச்னை களைப்பற்றி. தோழர் நெடுஞ்செழியன் எப்போதும் காரிய மாற்றிக் கொண்டே இருக்கும் இயல்பினர். நேரம வீணாகி விட்டது என்று கூறத்தக்க போக்கிலே, அவா இருந்ததை நான் கண்டதே இல்லை. இந்த இயல்பு, கழததுக்குப் பெருந்துணையளிக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை. வீட்டிலே என் குறும்புப் பார்வையைக் கண்டு தளருவார், எனினும் இயல்பு அவரை விடாது, மறுகணம், ஏதாவது வேலையைத் துவககிக கொள்வார். சிறையில் மூன்று திங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம்-அங்கு என்ன வென்று கருதுகிறீர்கள்- ஆச்சாரியார் ராஜினாமாச் செய்வது போல, அவசரச் சட்டம் பிறப்பிப்பது போல, பாதுகாப்புக் கைதியாக ஆக்கப்படு வதைப் போல, பெரியார் கட்டித் தழுவிக் கொள்வது போல், இபபடிப் பலப்பல ‘கனவுகள்'- விழித்தபடி - நான் கண்டு கொண்டிருப்பேன். அவர்? - வேலை! வேலை! வேலை!ஏதா வது செய்தபடி இருப்பார். இந்த அருங்குணத்தை நாம் நன்றாகப் பயன்படுத்தி, கழகத்தை மேனமையுறச் செய்து கொள்ள வேண்டும்.