உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13 என்னிடம் சில குறைபாடுகள் உண்டு - குறைபாடுகள் என்று சம்பிரதாய முறையில் சொல்கிறேன் - அதிலே ஒன்று தான் கனவு காண்பது; மற்றொன்று மிகக் கஷ்டமான நெருக் கடியின்போதும் சர்வ சாதாரணமாகக் கருதிக் கொண்டு சிரித்துக் கிடப்பது. இதிலே எனக்குச் சரியான ஜோடி சம்பத்து தான் / பெரியாரின் 'சர்டிபிகேட்டே' உண்டு இதற்கு பெரிய திருச்சியிலே திராவிடர் கழக மாநில மாநாடு-அதற்காக வேலை செய்வதற்காக ஒரு மாளிகையில் தங்கியிருக்கிறோம், நானும் சம்பத்தும் பெரியார் வேலை செய்கிறார் - விசாரப்படு கிறார் - தொல்லைப் படுகிறார். நானும் சம்பத்தும் மாடியில் ஏதேதோ பேசுகிறோம், சிரிக்கிறோம், பாடுகிறோம். (யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்) கவலையற்று! பெரியாருக்குக் கோபம் பொங்கி வழிந்தது! எப்படிப்பட்ட சமயம்! இந்த இரண்டு பசங்களும் சிரித்துக் கொண்டு இருக் கிறார்களே! துளியாவது கவலை இருக்கிறதா? ஒரு மாநாடு நடக்கவேண்டும், அது பற்றித் துளியும் கவலைப்படா மல், தின்பதும்,திரிவதும், ஆடுவதும்,பாடுவதும், செச்சே!- என்று பேசினார். அப்போது நான் செல்லப் பிள்ளை! இகழப் பட்டபோதும் பழிக்கப்பட்ட போதும், அன்பு காட்ட வேண் டியவர்கள் பகைக்கும்போதும், சிரித்துச் சோகத்தைச் சிதறடிப்பது என் முறை - மிகச் சிறியவனாக இருந்தது முதலே சம்பத்துக்கும் இது முறை. 'விளையாட்டுப் பிள்ளைகள்' என்று இதனைக் கொண்டு பெரியார் கூறுவதுண்டு. அதற்கும் நாங்கள் இருவரும் சிரித்தோம். அவரால் சகிக்கவே முடிய வில்லை. எனவே, டிக்கட் விற்பனை என்ற ஏற்பாட்டின்படி, சம்பத்தைக் கருவூருக்கே அனுப்பிவிட்டார்! சிரிக்கத் தெரியாமலிருந்தால் எனக்குப் பொதுவாழ்க்கை யிலே ஏற்பட்ட சங்கடங்களால், பைத்தியமே பிடித்துவிட் டிருக்கும். விளையாட்டுத்தனமல்ல அது - விசாரத்திலே மூழ்கிக் குழப்பமடைந்து போகாமலிருக்க, அது தகுந்தமுறை யாக அமைந்திருந்தது. குறைபாடுகள் என்று இவைகளைக் கருதலாம்-விவரம் கூறப்படா முன்பு. தோழர் நெடுஞ்செழியனைப் பெரியார், தமது மேற் பார்வையில் வைத்திருந்து பார்த்தார்-அவரால் யார்மீதும் குற்றம் காணமுடியும் ஆனால்,தோழர் நெடுஞ்செழியனிடம், அவராலும் ஒரு குறைகூடக் கண்டறிந்து கூற இயலவில்லை. அத்தகைய பணியாளர் நமக்குக் கிடைத்திருக்கிறார். தல்ல! அவருக்குக் கிடைத்திருக்கும் கழகமோ, சாமான்யமான ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகள்!