உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இடைவிடாத இயக்கம். 14 பொதுமக்கள் தொடர்பு கொண்ட களம் கண்ட காளைகள், தியாகத் தழும்பேற்ற தீரர்கள், கண்ணியத்தைக் காப்பாற்றும் பண்பினர் எண்ணற்றவர்கள். விழியில் நீர் வழிய வீதியில் விரட்டப்பட்டோம்-இன்று நமக்கென்று ஒரு தலைமை நிலையம், நம்முடையது என்று பெருமையுடன் கூறிக்கொள்ளத் தக்க ஒரு அச்சகம், நாம் செய்தோம் என்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொள்ளத் தக்க செயல் பட்டியல் - இவைகளைப் பெறுகிறார் தோழர் நெடுஞ்செழியன்-பன்மடங்கு இந்த வனப்பை, வலுவை, அதிகமாக்கிக் காட்டப் போகிறார். நமக்கென்று ஒரு தலைமை நிலையம், என்றேன்-மகிழ்கி றீர்கள் - நானோ, அந்த இடத்தில் சில பகுதி கலனாகி வரு வதையும், ஆகவே கட்டிடம் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அதற்கான செலவினையும் எண்ணிக் கவலைப் படுகிறேன். தோழர் நெடுஞ்செழியனை, அந்த இடத்திலே அழைத்துக் கொண்டுபோய் அமர்த்திவிட்டோம். அவரு டைய (நாட்களில்' நிலையம் புதிய உருவும் எழிலும் பெற வேண்டும் - அதற்கான வசதியை நாம் அவரிடம் தேடித் தர வேண்டும். நமக்கென்று ஒரு அச்சகம் என்று பெருமையுடன் பேசுகி றோம் -- ஆனால் நான் எவ்வளவு முயன்றும் 'நம் நாடு' பெரி தாகி விடவில்லை. அந்தப் பொறுப்பும், அவரிடம், இப் போது. அதற்கான ஆதரவு திரட்டி அவரிடம் ஒப்படைக்க வேண்டியது, நமது கடமை. மாநில மாநாடு! மிகப் பெரிய பொறுப்பு, நம்மை எல்லாம் அறைகூவி அழைக்கிறது. அதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு நமது பொதுச் செயலாளருக்கு நாம் துணை நிற்க வேண்டும். இவைகளையும் இவை போன்ற வேறுபல கடமைகளையும் நாம் நிறைவேற்றிக் கொடுத்தால்தான், நமது பொதுச் செய லாளர் மூலம் நமது கழகம் பெறவேண்டிய புதிய பொலிவுக் கும் வலுவுக்கும் வழி செய்தவர்களாவோம். நேற்றுத்தான், கண்ணீருடன் வெளிவந்தது போல் இருக் கிறது. இதற்குள் என்னென்ன கட்டங்கள்!! எவ்வளவு எதிர்ப்பு களைத் தாண்டி, இந்தக் கட்டம் வந்திருக்கிறோம்! இதுகளாவது- கட்சி நடத்துவதாவது- என்ற ஏளனம் ஈட்டி போலக் குத்திற்று. இதோ இரண்டாவது பொதுச் செயலாளர் - இரண்டாவது மாநில மாநாடு!!