உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

15 இது களாவது ஒன்று கூடி வாழுவதாவது- என்ற சாபம் மிரட்டிற்று. ஒன்று கூடி வாழ்வது மட்டுமா-ஒருவரை நம்பி ஒருவர் வாழக் கற்றுக் கொண்டோம்- தனி மனிதர்களைவிட ஒரு அமைப்பே முக்கியம் என்ற தத்துவம், நடைமுறைக்கு வந்து விட்டது. வளர்ச்சி சாதாரணமான தல்ல!! ஏ! அப்பா! பாரேன், இதுகளுக்குள் மூண்டுவிடப் போகிற வம்பு வல்லடிகளை, போட்டி பொறாமைகளை, பூசல் ஏசல்களை என்று கருவினர்--இதோ ஒரு மனதாகத் தேர்ந் தெடுத்து உடனிருந்து பணியாற்றுகிறோம், புதிய பொதுச் செயலாளருடன் தம்பி ! நான் இந்த மகிழ்ச்சியிலே திளைத்திருக்கிறேன். வெளிநாடு போகும் திட்டம் பற்றி எண்ணிக் கொண்டில்லை. ஒரு திங்கள் ஓய்வு கொடு - பிறகு மாநில மாநாட்டுக்கு நிதி திரட்டி வைத்துக் கொண்டு, எந்தப் பட்டி தொட்டிக்கு வேண்டுமானாலும் கூப்பிடு, வருகிறேன். ஓய்வு எடுத்துக் கொண்டு உல்லாச வாழ்வு நடத்தவா, உள்ளத்திலே ஓராயிரம் ஈட்டிகள் குத்துவது போல, மாற்றார் நடந்து கொண்டதைச் சகித்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும், கழகத்தை அமைத்து, இந்தக் கவர்ச்சிகரமான கட்டத்திற்கு வந்திருப்பது! கழகம் பணியாற்ற வேண்டிய துறைகள் பல உள - வெளிநாடு சென்று தெரிந்துகொண்டு வந்து பணியாற்ற வேண்டிய கட்டம் இது அல்ல - இப்போது உள்ள கட்டம், நமது நாட்டை முழுதும் நாம் பார்த்துப் பாடம் பெறும் கட்டம். அந்தக் கட்டத்தில், நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி உன் சீரிய யோசனையைக் கூறுவது டன் - சிறிதளவு பணமும் சேர்த்துத் தர வேண்டுகிறேன், மாநில மாநாட்டுக்கு. புதிய கட்டம், புதிய பொதுச் செய் லாளர், அவர் தலைமையில் இரண்டாவது மாநில மாநாடு- அதைச் சிறப்புற நடத்தித் தருவதிலேதான், கழகத்தின் மற்றோர் கட்டம் மலர இருக்கிறது. அணிவகுத்து நின்று, நாம் நம் கடமையைச் செய்ய வேண்டும். சில்லரைத் தகராறுகளைச் சிரித்து விரட்டுங்கள்- பெரிய இலட்சியத்திற்காகப் பாடுபடுகிறோம் என்ற எண்ணம் கொழுந்து விட்டெரியட்டும். புதிய பொதுச் செயலாளரின் திறத்தையும் அருங் குணத் தையும் கழகம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமா னால், நாம் ஒவ்வொருவரும் நமது கடமையைத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும், முயற்சி எடுக்க வேண்டுமென்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், தம்பி முயற்சி