உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

16 எடுத்தால் போதும்; முடித்தே காட்டுவீர்கள் என்பதை அனுபவத்தில் கண்டவனல்லவா நான், அதனால்தான். சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டிலே கூடியது போல, குறைந்தது இரட்டிப்பு மடங்கு மக்கள் கூடுவர், திருச்சியில்-நடு நாயகமல்லவா, அதனால். அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்திக் கொடுக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள நேரத்தில், காகி தக் கப்பலின் மீது கவனம் செலுத்தலாகாது; மாநாட்டுக் கான யோசனைகளை நண்பர்களுடன் கலந்து பேசி, தலைமை நிலையத்துக்குத் தெரியப்படுத்து. மாநில மாநாட்டிலே கவ னிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை இப்போ திருந்தே உள் ளூர்க் கிளைக் கழகத்தில் கலந்து பேசுங்கள் - திட்டம் தயாரித்து அனுப்புங்கள் - தம்பி!- பணமும் அனுப்பு!' 8-5-1955 கடிதம்: 2 தம்பி, அன்புள்ள, Jimmyzna புதிய உற்சாகம் மாஸ்டர் தாராசிங்கும் பாஞ்சாலமும் - கழகத்தில் தோழமை முன்பு எழுதிய கடிதம் கண்டு:மகிழ்ச்சி தெரிவித்ததற்கு என் நன்றி. நமது இயக்கம் நன்றாகத் தழைத்திருப்பதுகண்டு அருவருப்பு அடைபவர் பலர் உண்டல்லவா-அவர்கள், அவர் களின் பண்புக்குத் தக்கபடி பழிசுமத்துவதும், புகார் கிளப்பு வதும், வதந்திகளை உலவ விடுவதும், வம்புக்கு இழுப்பது மாகத்தான் இருப்பர், நாம் அவைகளைப்பற்றிக் கவலைப்படக் கூடாது; நாம் கவலைப்பட வேண்டும், கோபமடைய வேண் டும் என்பதற்காகத்தானே அவர்கள் அவ்விதமெல்லாம் பேசு வதும் எழுதுவதும்! அந்த வலையில் நாம் விழலாமா? நமக்கு நிரம்ப வேலை இருக்கிறதே தம்பி! நமது சக்திக்கு மீறிய காரி யத்தை அல்லவா நாம் மேற் போட்டுக் கொண்டிருக்கிறோம். உன் நினைவு முழுவதும் அதிலே செல்லவேண்டும்,ஆமாம், சில்லரைகளில் சிந்தனையைச் செலவிடக் கூடாது.