உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

17 நாட்டு நடவடிக்கைகள் பலவற்றிலும் தொக்கிக் கிடக் கும் உண்மைகளைக் கண்டறிந்தால் நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சி எவ்வளவு தூய்மையும், வாய்மையும் கொண்டது என்பது விளக்கமாகும். கோட் சென்ற கிழமை வடக்கே ஒரு கிழவர் சிறைக் டம் அழைத்தேகப்பட்டார். மாஸ்டர் தாராசிங் பன்முறை சிறை சென்றவர். சீக்கிய பெருங்குடி மக்களின் ஒப்பற்ற தலை வர் - காங்கிரஸ்காரர் அல்ல. அவர் காங்கிரஸ்காரராகி இருந்தால், பாபு ராஜேந்திரப் பிரசாத், அபுல்கலாம் ஆசாத் போன்றாரின் வரிசையில் இடம் பெற்றிருப்பார். ஆனால் அவருக்குக் குறிக்கோள் இருக்கிறது - கருவிலே உள்ள குழவி போன்றதாகத்தான் இன்னமும் இருக்கிறது- முழு வளர்ச்சி அடையவில்லை. அந்தக் கருவையே சிதைத்திடத்தான் அவர்மீது கடுமையான அடக்குமுறை வீசப்பட்டு வருகிறது. தாராசிங், சீக்கியர்களுக்காக ஒரு தாயகம் கேட்கிறார். சீக்கிய மொழி. கலாச்சாரம், மார்க்கம் ஆகியவைகள் காக்கப்பட்டு வளமடைய வேண்டுமானால், 'பஞ்சாபி மொழி பேசும் பிராந்தியம் ஏற்படவேண்டும் என்று கிளர்ச்சி செய்து வருகிறார்; சில ஆண்டுகளாகவே, சீக்கியர்களிலே, காங் கிரஸ் கட்சிக்குப் பலதேவ்சிங்குகள் அடிக்கடி கிடைக்கத் தான் செய்கிறார்கள்; நேரு பண்டிதரும் அடிக்கடி அந்தப் பகுதி சென்று பவனி வரத்தான் செய்கிறார் என்றாலும், தாரா சிங்கின் 'தாரகம்' பஞ்சாபில் வெற்றி பெற்று வருகிறது. பாது பஞ்சாப் மாகாணம், வங்காளம் போலவே, பாகிஸ்தான் அமைப்பின் போது, இரண்டாக்கப்பட்டது, உனக்குத் தெரி யும். இந்திய பூபாகத்துடன் இணைந்து இருக்கும் பஞ்சா பிலே அமிர்தசரஸ் இருக்கிறது-இது சீக்கியர்களின் காசி! தங்கக் கோயில் ஒரு தடாகத்தின் நடுவே இருக்கிறது.கோயி லில், இராமன் - கிருஷ்ணன்-முருகன் - நான்முகன் இப்படிச் சிலைகள் கிடையாது - சீக்கியரின வேத புத்தகம் வைக்கப் பட்டிருக்கிறது -சீக்கியர்கள் அங்குச் சென்று தூய மன நிலை பெறுகிறார்கள் காலைச் சூரியன் ஒளியில், தங்கக் கோயிலின் நிழலுருவம் தடாகத்தில் தெரிகிறது. காண்பதற்கு அருமை யானதோர் காட்சி நான் அக்காட்சியைக் கண்டு களித் திருக்கிறேன். சீக்கியர்களிடையே உள்ள ஒற்றுமை உணர்ச் சியையும் அதுபோது காணமுடிந்தது. பேசி மொழி வழி அரசு அமைந்தால்தான், சுயராஜ்யம் பொலி வும் வலிவும் பெறும் என்று காங்கிரஸ் தலைவர்களே வந்தனர். அந்த முறையிலே பார்க்கும்போது, தாராசிங் கேட்கும் 'பாஞ்சாலம அமைக்கப்பட வேண்டியதுதான் நியாயமாகும். ஆனால் காங்கிரஸ் சர்க்கார் இதை எதிர்க்கிறது பிடி ஆட்களைப் பெற்று, இந்தக் கிளர்ச்சியை ஒழித்துக்