உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18 கட்டப் பார்கிறது. தாராசிங் பணிய மறுக்கிறார்! சிறையில் தள்ளுகிறார்கள் - தணலில் தங்கமாகிறார். சீக்கியர்களிலேசில ரைப்பிடித்து அவரை நிந்திக்க வைக்கிறார்கள்; அவர், அவர் களின் நிலைமையைக் கண்டு பரிதாபப்படுகிறார். அவர் எப் போது கிளர்ச்சி துவங்கினாலும் இளைஞர் அணிவகுப்புத் துணைக்கு நிற்கிறது. அறப்போரில் ஈடுபட ஏராளமானவர் கள் முன்வருகிறார்கள். எனினும் மாஸ்டர் தராசிங் பற்றி யும், அவர் நடத்திவரும் இயக்கத்தைப் பற்றியும், நமக்கெல் லாம் அதிகமாகத் தெரியாது - தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதில்லை. இருட்டடிப்பு! ஆமாம் இங்கே, திராவிடநாடு பிரிவினை எவ்வளவு வேகமாக வளர்ந்திருக்கிறது என்பது எப்படி மற்ற பகுதியினருக்குத் தெரியாதபடி 'இருட்டடிப்பு இருக்கிறதோ, அதுபோல பாஞ்சாலக் கிளர்ச்சி பற்றிய முழுத் தகவலும் நமக்குத் தெரிவது இல்லை-இருட்டடிப்புத்தான்! நாகநாடு கிளர்ச்சி பற்றி ஒவ்வோர் சமயம் துண்டு துணுக்குகளாகச் செய்திகள் வருகின்றன -தொடர்ந்து அங்கே என்ன நடைபெறுகிறது என்பது தெரிவதில்லை-கார ணம் இருட்டடிப்புத்தான்! மணிப்பூரில் தனிநாடு கிளர்ச்சி அரும்பியிருக்கிறது- சேதி தாராளமாகக் கிடைப்பதில்லை-இருட்டடிப்பு! பர்மாவில், பல ஆண்டுகாலமாகக் கிளம்பி, படை பலத் துடன் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, கரேன் நாடு கிளர்ச்சி - இதுவும் இருட்டடிப்பின் காரணமாக, முழுவதும் நமக்குத் தெரிவதில்லை. இந்தோனேஷியாவில் கிளர்ச்சி இருக்கிறது. தாருல் இஸ்லாம் என்றோர் பயங்கரமான நிகழ்ச்சிகள் ஏற்படும்போது மட்டுமே இவைபற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது- தொடர்ச்சியாகச் செய்திகள் தரப்படுவதில்லை. திராவிடநாடு கிளர்ச்சி குறித்தும் இது போலத்தான்- எப்போதாவது திடுக்கிடக்கூடிய சம்பவங்கள் நேரிட்டால், இந்திய பூபாகத்தின் மற்றப் பகுதிகளில் ஒரு சிறிது தெரியும்; மற்றச் சமயத்தில் இருட்டடிப்பு சென்ற ஆண்டு, இரயில் நிறுத்தக் கிளர்ச்சி' நடைபெற்றபோது, இந்தியாவின் எல் லாப் பகுதியிலும், திராவிடநாடு கிளர்ச்சி பற்றி, தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. பிறகு, எப்போ தும் போல மூடிவிட்டனர். ஓரளவு இந்தக் குறைபாடு நீங்க, திராவிடநாடு கிளர்ச்சி பற்றி, பிற இடங்களில் அறிந்து கொள்ளத்தக்க வகையில், ஆங்கில ஏடு நடத்துவது என்ற எண்ணம் எனக்கு நீண்டகாலமாக