உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19 உண்டு. இருமுறை அதற்கான முயற்சி எடுத்து முறிந்து போனது முண்டு இப்போதும் அந்த எண்ணம் இருந்தபடி தான் இருக்கிறது-தக்க வாய்ப்பு ஏற்படவில்லை. தம்பி! நமக்கிருக்கும் குறைபாடுகள் இவை போன் றவையேதவிர, இல்லாததும் பொல்லாததுமாக நம்மைப் பற்றி இடுப்பொடிந் ததுகளும், இஞ்சி தின்றதுகளும், பேசுவதாலும் எழுதுவதா லும் இல்லவே இல்லை என்பதை முதலில் மனதிலே நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். அந்தக் கட்டத் தைத் தாண்டிவிட்டோம். வீசப்படவேண்டிய பழிச்சொல் அவ்வளவும், எவ்வளவு வேகமாகவும் திறமையுடனும் வீசப் படவேண்டுமோ அவ்விதம் வீசிப் பார்த்தாகிவிட்டது. இப் போது கிடைப்பதெல்லாம் மறுபதிப்புகள் - எளிய பதிப்புகள் இலவச வெளியீடுகள்!! இவைகளைப் பற்றிக் வேண்டிய நிலையில் நாம் இல்லை. கவலைப்பட ஏன் அங்கே வெடிப்பு,இங்கே கொந்தளிப்பு,இங்கே குழப்பம், என்றெல்லாம் எழுதுகிறார்கள். படிக்கும்போது ஆத்திரமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறாய். தம்பி! இதற்கு ஆத்திரம், ஆயாசம்? நம்மைப்பற்றிய 'செய்திகள்' பிற கட்சிக் காரர்களும் இதழ்களும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய அளவுக்கு, நாட்டில் முக்கியத்துவம் பெற்றுவிட்டன என்பது தானே அதன் பொருள். இதற்கு ஆயாசப்படுவதா!! பேத மும் பிளவும், வெடிப்பும் குழப்பமும் ஏற்பட்டால்தான், நமது இயக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று கிலி கொண்டவர்கள், இப்போது கீறலைக் கண்டு வெடிப்பு என்று கூவிக் களிப்படைகிறார்கள்! இங்கிருந்து செல்பவர்களும், இங்கு இருந்துவிட்டு வந்தவர்கள் என்ற காரணத்தாலேயே வாழ்த்தும் வரவேற்பும் பெறுகிறார்கள் - இந்த உபசரிப்பும் உலாவும் சிலநாட்களுக்கு நடைபெறும்.நமது மாஜி நண்பர் கள் என்ற முறையில் அவர்கள் எப்படியோ ஒன்று மகிழ்ச்சி பெறட்டும் என்பதுதான் என் எண்ணம். அவர்களை எத்தனை நாளைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது தெரி யாததா! இவ்விதம் 'பயணம்' நடத்தியவர் பலர்; அவர் களிலே யார் இன்று, உருவம் தெரியும் நிலையில் இருக்கிறார்கள்? ஆயினும் எனக்கு-உண்மையில் கூறுகிறேன்--நமது இயக் கத்தைவிட்டு யாராவது பிரிந்து செல்கிறார்கள் என்றால், வருத் தந்தான். கூடுமான வரையில் கூடி வாழ்வதைத்தான் நான் விரும்புகிறவன் சுவரிலிருந்து சிறு ஆணி பெயர்க்கப்பட்டா லும், ஆபத்து இல்லை என்றாலும், பார்க்க நன்றாக இராது என்று எண்ணுபவன். இந்த நோக்குடனேயே நான், சிலர் வெளியேற எண்ணும்போதெல்லாம், சமரசத்திற்காக முயன் றிருக்கிறேன். அவர்கள் ஏற்கனவே, வேறு இடத்தில், 'அச் சாரம் வாங்கி விட்டார்கள் என்று தெரிகிற வரையில், சம