உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20 ரசம் பேசுவேன்- ‘கைமாறி விட்டது" என்று தெரிந்தால், என்ன செய்வது. சரி அவ்வளவுதான்! என்று எண்ணிக்கொள் வது. அவர்கள் வெளியேறி வேறிடம் சென்றதும், அங்கு கொஞ்சம் காரசாரமாகப் பேசி, கண்டித்துத்தானே 'சபாஷ்' பட்டம் பெறவேண்டும். எனவே பேசுகிறார்கள். ஏசுகிறார்களே என்று வருத்தப் படலாமா- இங்கே இருந்தபோது எவ்வளவு புகழ்ந்திருக்கிறார்கள்! எவ்வளவு பற்றுப் பாசம் காட்டியிருக்கி றார்கள்! வழியே போகிறதுகள், வம்புக்கு வருபவர்கள், தொடர்பே அற்றதுகள், இப்படிப்பட்டவர்களெல்லாம், எடுத் தேன் கவிழ்த்தேன் என்று நம் இயக்கத்தைப் பற்றிப் பேசித் திரியும்போது, இருந்துவிட்டுப் போனவர்கள், இயன்றதைச் செய்தவர்கள், நண்பர்களாயிருந்தவர்கள், பிரிந்த காரணத் தால் இரண்டோர் இடத்தில் கடுமையாகத் தாக்கினால், குடி முழுகிவிடாது. அவர்கள் ஆசையும் தீர்ந்து போகட்டுமே, பாவம்! இந்தச் சம்பவங்களைப் பற்றி எல்லாம் படிக்கும்போது தம்பி! நாம் இயக்கத்தை நடத்திச் செல்வதில் இதுவரை காட்டிவரும் தோழமையைவிட, அதிக நேர்த்தியான தோழ மையைக் காட்டிவரவேண்டும் என்ற பாடத்தைத்தான் பெற வேண்டும். மற்ற எந்த இயக்கத்திலும் இல்லாத அளவு தோழமை உணர்ச்சி நமது சழகத்திலே இப்போது இருக்கத் தான் செய்கிறது. அந்தப் பண்பு மேலும் வளரவேண்டும். தேர்தல் எனும் முறையே இன்றி, ஒரு இயக்கத்தின் தலைவர் பார்த்து வைத்ததுதான் சட்டம் என்றிருக்கும்போது, தோழ மை உணர்ச்சி அல்லது, பயம் போதும் நாமோ, சிற்றூர் கிளைக் கழகம் முதற்கொண்டு, பொதுச் செயலாளர் வரையில் தேர்தல் முறை வைத்திருக்கிறோம். தேர்தல் என்றால், போட்டி, கட்சி சேர்த்தல் என்பதுதான் உடனடிப் பொருள். எனவே தேர்தலின் காரணமாகச் சிறுசிறு சச்சரவுகள் எழத் தான் செய்யும். இந்தச் சச்சரவும் தேர்தல் ஊழல்களும், நம்முடைய கழகத்திலே மிகமிகக் குறைந்த அளவிலேதான் இருக்கிறது - வேறு அமைப்புகளுடன் ஒப்பிடும்போது. சின்னாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற தேர்தலின் போது - வாய்ச் சண்டை வளர்ந்து மேஜை நாற்காலிகள் வீசிக்கொள்ளப்பட்டன என்று படித்திருப்பாய்.இது,காங் கிரஸ் கமிட்டித் தேர்தலில். அதுபோலவே வடாற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தேர்தலிலும் "ரசாபாசம் நேரிட்டதாகச் செய்தி வந்தது. இலங்கையில் தொழிலாளர் அமைப்பிலே நடைபெற்ற தேர்த லிலும், போட்டி,பூசல் அள வுக்குச் சென்று, தேர்தல் வேலையே வெற்றிகரமாசச் செய்ய முடியாமற் போய்விட்டது. இவைகளை எடுத்துக் காட்டு வதன் காரணம், நமக்குள்ளாகத் தேர்தல் தகராறு எழுவது