உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

21 சரிதான் என்று வாதாட அல்ல. தேர்தல் தகராறுகள் நம் மில் பிறரிடம் இருக்கும் அளவுக்கு இல்லை என்பதை நினைவு படுத்தி, இப்போது எழும்பியுள்ள சிறு தகராறுகளும் எழாத வகையில் இனிநாம் பணியாற்ற வேண்டும் என்பதைக் கூறத் தான். ஏனெனில், நமது இயக்கத்திலே காணக் கிடக்கும் மாண்புகளை, மாற்றார்கள் போற்ற மாட்டார்கள்; ஆனால், ஒரு சிறு தகராறு தெரிந்தாலும் போதும், சுட்டிக் காட்டிச் சிரிப்பார்கள். இதற்கு இடமளிக்கும் முறையில் யாரும் நடந்துகொள்ளக்கூடாது. தேர்தல் காரணமாகச் சிறு மனத் தாங்கல் ஏற்பட்டுவிட்டிருந்தாலும், தாங்கிக்கொள்ளும் பெரிய மனமும், மீண்டும் ஒன்றுபட்டுப் பணியாற்றும் தோழமை யுள்ளமும் வேண்டும். கழகத்தின் பொதுப் பிரச்சினை பற்றிக் கவனம் செலுத்திக் காரியமாற்ற, நமது பொதுச் செயலாள ருக்கு நேரமும் நினைப்பும், திறனும் வாய்ப்பும் பயன்பட இட மளிக்க வேண்டுமேயல்லாமல், இத்தகைய தேர்தல் தகராறு கள், இடம் பிடிப்பதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் ஆகியவற்றை யெல்லாம் கவனித்து ஆவன செய்யும்தொல்லையை, அவருக்கு நாம் தருவது முறையாகாது. இதிலே, தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குத்தான் முழுப் பொறுப்பு இருக்கிறது. அவர்கள்தான் தத்தமது வட்டாரத்தில் காணப்படும் மனத் தாங்கலைத் துடைத்திட முயற்சிக்க வேண்டும். கழகத்துக்குள் அடிப்படை பிரச்சினைமீது அல்ல, தவறான எண்ணம், மனச் சங்கடம் ஆகியவற்றின் காரணமாக எழும் சிக்கலைத் தீர்க்கும் திறம் இல்லாமற் போய்விட்டால், பிறகு எங்ஙனம், பொதுமக்களை அணுகி, அவர்களின் சந்தேகங்களைப் போக்கி, அவர்களை இயக்கத்தில் கொண்டுவந்து சேர்ப்பது? எனவே, வெற்றி பெற்ற தோழர்கள், தத்தமது வட்டாரத்தில் ஒற்று மையும் தோழமையும் மலருவதற்குப் பாடுபட்டு, அதிலே வெற்றி காணவேண்டும் - தேர்தலில் பெற்ற வெற்றியைவிட இந்த வெற்றியையே பெரிதென்று எண்ணவேண்டும். வடநாடு தென்னாட்டைச் சுரண்டிக் கொண்டுதான் வரு கிறது; ஐந்தாண்டுத் திட்டத்திலே ஓரவஞ்சனையாகத்தான் நடந்து கொண்டது என்ற கருத்தும், இந்தியைத் திணிப்பது, எதேச்சாதிகார முறை, மொழி வெறி, ஏக பாஷைப் பித்தம். இதைக் கண்டித்தே தீர வேண்டும், இந்த முயற்சியை எதிர்த்தேயாக வேண்டும் என்ற கருத்தும், இப்போது காங்கிரஸ் வட்டாரத்திலேயே வெகுவாகப் பரவிவிட்டது - வெளிப்படையாகவே பேசப்படுகிறது. இந்த நல்ல சூழ்நிலையைக்கழகத் தோழர்கள் தக்கவிதத் தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.