உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22 திராவிட நாடு கேட்பதற்கான காரணங்களை, முன்பு, காதால் கேட்பதும் 'பாபம்', தேசீயத்துக்கு விரோதமான காரியம் என்று எண்ணிக்கொண்டிருந்த காங்கிரஸ்காரர்களி லேயே ஒரு பகுதியினர், இப்போது திராவிட நாடு பிரச்சினை யைத் தெரிந்துகொள்ள ஆவல் காட்டுகிறார்கள். அவர்கள் உணரும்படியும் ஒப்பும்படியும் எடுத்துக் காட்ட நம்மிடம் ஏராளமான காரணங்கள், புள்ளி விபரங்கள் உள்ளன. அவர் களின் மனதைப் பக்குவப்படுத்தும் முறையில், நாம் அவை களை எடுத்துக் கூறவேண்டும். இந்தப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் நாம், அதற்கேற்றபடி பெரிய மனம் படைத்தவர்களாகித் தீரவேண்டும். இருட்டடிப்புப் பற்றிக் குறிப்பிட்டேன். அது, வெளியே நமது கருத்தும் வளர்ச்சியும் தெரிய விடாமல் செய்வது பற்றி மட்டுமல்ல, இங்கேயே உள்ள இருட் டடிப்பு பற்றியுந்தான். இங்குள்ள 'பத்திரிகைகள்' நமது மூலாதாரக் கொள் கையை மறுப்பன. எனவே, அந்தக் கொள்கையை இருட் டடிப்பு மூலம் சாகடிக்கலாம் என்று எண்ணுகின்றனர். இதி லிருந்து நாம் தப்ப வேண்டுமானால், ஒவ்வொரு கிளைக். கழகமும் தனிப்பட்டவர்களும் கூட, இயக்கக் கருத்துக் களையும், அக்கருத்துகளுக்கு ஆக்கம் தரும் நிகழ்ச்சி பற்றியும், அவ்வப்போது துண்டு அறிக்கை வெளியிட்டு, வீடு தோறும் வழங்க வேண்டும். நமது இயக்கக் கருத்துக்கள் பொதிந்த பாடல்களையும், நாடகங்களையும் மேலும் வளமும் வண்ணமும் உள்ளதாக்க வேண்டும். புள்ளி விவரங்களைத் தயாரித்து. முச்சந்திகளில் பொறித்து வைக்க வேண்டும். கழகத் தோழர் ஒவ்வொருவரும் இம்முறையில் ஏதேனும் ஒரு பணியாற்றி, இயக்கத்துக்குத் தொண்டாற்ற வேண்டும். ஒரு திங்கள் இம்முறையில் பணியாற்றிப் பாருங்கள். உங்கள் மன துக்கே புதியதோர் உற்சாகம் பிறக்கும். நோக்கம் இவ்வகை யில் திரும்பினால், பிறகு, சிறு சச்சரவுகள் பற்றிய சிந்தனையும் அற்றுப்போகும், சீரழிவானவர் வீசும் சிறு சொல்லும் நம் மைச் சுடாது. 22-5-1955 அன்புள்ள, அண்னுது.