உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காஞ்சிக் கடிதம் : 6

என்னை வாழவிடு!
விலைகளைக் கட்டுப்படுத்து!



இரட்சா பந்தன நாளில் இலால்பகதூரிடம்
         தாய்க்குலம் விடுத்த வேண்டுகோள்.
செஸ்டர் பவுல் கூற்றின் பொருள்.
ஐந்தாண்டுத் திட்டங்கள் பயன் தாராமைக்குக்
        காரணங்கள்
விஷச் சக்கரச் சுழற்சி.

தம்பி,

தாய்க்குலத்தின் தனித்திறமையிலே எனக்கு எப்போதுமே தளராத நம்பிக்கை உண்டு; அந்த நம்பிக்கை மேலும் வளரத்தக்க விதத்திலே ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது; மன நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தத்தக்க நிகழ்ச்சி அது.

இந்தக் கிழமை, வடக்கே உள்ளவர்கள் ஒரு நோன்பு கொண்டாடுகின்றனர்; அதனை ரட்சாபந்தன தினம் என்கிறார்கள் — நோன்பிருந்து கங்கணம் கட்டிக்கொள்வது.

இந்தத் திருநாளைக் கொண்டாடும் தாய்மார்கள், டில்லிப் பட்டணத்தில் லால் பகதூர் அவர்களைக் கண்டு