உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காஞ்சிக் கடிதம்: 7

நாலும் நாலும்


விலைகள் ஏறிவிட்டதற்குக் கூறப்படும் காரணங்கள்
‘குழப்பக் கல்லூரி’யில் நேர்மாறான கருத்துகள்
நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் நிலை
ஜனநாயக சோஷியலிசம்:
இருபதாம் நூற்றாண்டின் இணையிலா மோசடி!

தம்பி,

நாலும் நாலும் ஏழு என்று ஒரு மாணவனும், ஒன்பது என்று மற்றோர் மாணவனும் கூறினால், அவர்கள் தலையில் குட்டி, காதைக் கிள்ளி, இப்படிப்பட்ட மர மண்டைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் நிலை பிறந்ததே என்று ஆசிரியர் ஆயாசப்படுவார்; பெற்றோர்களோ, எத்தனை கட்டைப் புத்தியாக இருப்பினும் ஆசிரியர் தமது பிள்ளைகளுக்கு அறிவு பிறந்திடச் செய்வார் என்று நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால், நாலும் நாலும் ஏழு என்று ஒரு ஆசிரியரும், இல்லை இல்லை ஒன்பது என்று மற்றோர் ஆசிரியரும், வேறொருவர் நாலும் நாலும் ஏழா ஒன்பதா என்று தீர்மானிப்பதற்கு முன்பு ‘நாலு’ என்றால் எத்தனை என்பதைக் கண்டாக வேண்டும் என்றும் கூறிடும் ஒரு பள்ளிக்கூடம் இருந்தால் என்ன செய்வர் பெற்றோர்? என்னகதி ஆவர் மாணவர்?