உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

இதனையும் பொருளாதார நிபுணர் அகர்வால் விளக்கியுள்ளார்.

இந்த நிலையில், தம்பி! தாய்மார்கள், லால்பகதூரிடம் வேண்டுகோள் விடுத்ததிலே தவறென்ன இருக்க முடியும்?

வாழவிடு
விலையைக் குறை!

என்பதுதான் இன்று நாடெங்கும் எழுந்துள்ள முழக்கம்.

ஆனால், எல்லா முழக்கங்களையும்விட, லால்பகதூரின் உள்ளத்தைத் தைக்கத்தக்கதாக, எவர் நெஞ்சையும் நெகிழ்ந்திடச் செய்யத்தக்கதாக அமைந்துவிட்டது, தாய்மார்கள், லால்பகதூருக்குத் தந்த ‘ரட்சை’யில் குழந்தையின் உருவத்தைப் பொறித்து, அதிலேயே,

"என்னை வாழவிடு!
விலைகளைக் கட்டுப்படுத்து!!

என்றும் பொறித்திருப்பது.

பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு, நாட்டின் ஆளவந்தார்க்கு, இத்தகைய ஒரு வேண்டுகோள் தரப்படுகிறது. அந்த நிலைக்கு ஆட்சியிலுள்ளோர், நாட்டினைக் கொண்டுவந்து விட்டனர். ஆனால், காமராஜர் கூறுகிறார், ‘எம்மையன்றி எவருளார் ஆள!’ என்று!! என்ன செய்வது, தம்பி! சிரிப்பதா அழுவதா! தெரியவில்லையே!


30-8-64

அண்ணன்,
அண்ணாதுரை