108
திட்டம் போதுமான, எதிர்பார்த்த பலன் தரவில்லை.
எனவே, இனித் திட்டமிடுவதிலும், திட்டத்தை நிறைவேற்றுவதிலும் ஒரு மாற்றம் செய்யப்போகிறோம்என்று,
திட்டங்களின் மூலமாகக் கிடைக்க வேண்டியவைகள் கிடைக்காது போன நிலையில் வெறும் பணம் மட்டும் தண்ணீர் பட்ட பாடு என்பார்களே, அதுபோலப் புரள ஆரம்பித்ததால், விலைகள் ஏறின. விசாரம் வளர்ந்தது; விலைகள் ஏறவே கூலி உயர்ந்தது; கூலி உயரக் கண்டதும் விலையை மீண்டும் ஏற்றினர்; விலை மேலும் ஏறவே கூலி உயர்வு மீண்டும் தேவைப்பட்டது; இவ்விதம் ஒரு விஷச்சக்கரம் சுழல்கிறது. அதன் கொடிய பற்களிலே நாடு சிக்கிச் சங்கடப்படுகிறது.
பணப் புழக்கம் அதிகமாகி உள்ள அளவுக்குப் பண்டங்களின் உற்பத்தி அளவும் வளர்ந்தால் நிலைமையில் நெருக்கடி ஏற்படாது; பசு தின்னும் தீனி அளவுக்காவது பால் கிடைக்க வேண்டுமே! அவ்விதமின்றி தீனிக்குப் பசுவாக இருந்து. பாலுக்காகச் செல்லும்போது, பசு காளையாகி விட்டால் நிலைமை எப்படி இருக்கும்! அந்த நிலை இப்போது. தம்பி! திட்டங்களுக்காகக் கொட்டிக் கொடுத்தாயிற்று; அதற்காக அவிழ்த்துக் கொட்டப்பட்ட பணம் ஊரெங்கும் உருள்கிறது. ஆனால், அந்த அளவுக்கு பண்டங்கள் பெருகவில்லை திட்டத்தின்படி. எனவே பணவீக்கம்; பண வீக்கத்தால் விலை ஏற்றம்; விலை ஏற்றத்தால் பணத்தின் மதிப்பு சரிந்து விட்டது!
திட்டக் கமிஷனில் உள்ள பொருளாதார நிபுணர் அகர்வால்,
‘ரூபாயின் மதிப்பு கட்டுப்படியாகவில்லை’ என்கிறார்.
‘ரூபாயின் மதிப்பு வீழ்ந்து விட்டது என்றால், என்ன பொருள்? விலைவாசி ஆறு மடங்கு அதிகமாகி விட்டது என்று பொருள். இந்த ஏற்றம் மக்கள் தாங்கக் கூடியதல்ல.’