உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

சகல ரோக நிவாரணியைக் கையிலே வைத்துக் கொண்டு, பயன்படுத்தத் தெரியாமல் விழிக்கிறீர்களே! இத்தனை இன்னலும் மூட்டியவர் எவர்? தனிப்பட்ட முதலாளிகள், அவர்களைத் தலையில் தட்டி உட்கார வைத்திடாமல், சமதர்மத்தை அமுல் நடத்தாமல், கடப்பாரையை விழுங்கிவிட்டுச் சுக்குக்கஷாயம் சாப்பிடுவதுபோல, முதலாளித்துவத்தைக் கட்டி அணைத்துக்கொண்டு, களைத்துவிட்டோம், இளைத்து விட்டோம் என்று கைபிசைந்து கொள்கிறீர்களே உடனே, சோஷியலிசத்தை நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள்! பிறகு, பாருங்கள், எல்லாத் தொல்லைகளும் பஞ்சு பஞ்சாகிப் பறந்திடும்.

இவ்விதம் எழுச்சியுடன் பேசுகிறார் இந்தியப் பேரரசின் அமைச்சராக இருந்து விலகிய மாளவியா எனும் மாபெருந்தலைவர்—காங்கிரஸ் தலைவர்!! எழுந்திருக்கிறார் மற்றோர் காங்கிரஸ் தலைவர், ஒருமுறை சூழ இருப்போரைப் பார்க்கிறார்.

எதற்கும் தலையாட்டித் தலையாட்டி எல்லாக் காரியத்தையும் கெடுத்துக்கொண்டோம். மனத்தில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசவேண்டும். பேசுகிறேன். சோஷியலிசம் சர்வரோக நிவாரணி அல்ல! சோஷியலிசத்தினால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. தவறு! தவறு!!

இவ்விதம் பேசியவரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரே—மைசூரில் முதலமைச்சராக இருத்தவர், அனுமந்தய்யா என்பவர்.

துரிதமான, துணிவுமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ஒருவர்.

ஆர அமர யோசித்து, விளைவுகள் என்னென்ன நேரிடக்கூடும் என்று பார்த்து. மெள்ள மெள்ளத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் இன்னொருவர்.

இப்போதைய நெருக்கடி போக்கிட உடனடியாக அதிக அளவு உணவுப் பொருள் வெளிநாடுகளிட

அ.க.—8