114
மிருந்து வரவழைத்தாக வேண்டும் என்று கூறுகிறார் ஒருவர்.
வரவழைக்கிறோம். வருகிறது. அமெரிக்காவிலிருந்தும், தாய்லாந்து, கம்போடியா ஆகிய இடங்களிலிருந்தும். பாகிஸ்தானிலிருந்துகூட வருகிறது என்கிறார் லால்பகதூர்.
அவமானம்! அவமானம்! இவ்வளவு ஆண்டு சுயராஜ்யத்துக்குப் பிறகுமா சோற்றுக்காக வெளிநாட்டானிடம் பிச்சை எடுப்பது? கேவலம்! கேவலம்! அதிலும் பாகிஸ்தானிடமிருந்து உணவுப் பொருள் பெறுகிறோம் என்று கூறுவது கேட்க வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன் என்று பேசுகிறார், காட்கில் எனும் பழம் பெரும் காங்கிரஸ் தலைவர்.சர்க்காரே உணவு தானிய வாணிபத்தை மேற்கொள்ள வேண்டும், அப்போதுதான் கொள்ளை இலாபமடிப்போரின் கொட்டத்தை அடக்க முடியும் என்று ஒருவரும் சர்க்கார் உணவு தானிய வாணிபத்தை மேற்கொள்ளக் கூடாது, வகையாகச் செய்திட முடியாது, நெருக்கடி அதிகமாகிவிடும் என்று மற்றொருவரும் நேர்மாறாகப் பேசுகின்றனர். இருவரில் எவரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்ற நோக்கம் காட்டி, வணிகர்களை அடியோடு ஒழித்துக் கட்ட அல்ல, சர்க்கார் உணவு தானிய வாணிபத் துறையில் ஈடுபடுவது—ஈடுபடப்போவது முழு அளவில் அல்ல–ஒரு அளவுக்குத்தான்–வணிகரும் இருப்பர்–சர்க்காரும் வணிகர் வேலை பார்க்கும்–இது கொள்ளை இலாபத்தைத் தடுக்க–வாணிப முறையைச் செம்மைப் படுத்த—சீர்குலைக்க அல்ல என்று கனம் சுப்பிரமணியம் கூறுகிறார்.
உரங்கள் விவசாயிகளுக்குக் கிடைத்திட வழி செய்யுங்கள் என்று கேட்கிறார் ஒருவர்.
கடலைப் பிண்ணாக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலே 45 கோடி கிடைத்ததாமே சென்ற ஆண்டு, அதனை இந்த ஆண்டு அதிகமாக்க வழி செய்க என்கிறார் வேறொருவர்.
சதாசர் சமிதி மூலம் ஊழலையும் இலஞ்சத்தையும் ஒழித்துக்கட்ட முடியும்—கட்டப்போகிறேன்—கட்டிக் கொண்டு வருகிறேன் என்று பேசுகிறார் நந்தா.